டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணம் செலுத்துவது முதல் ஷாப்பிங் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இப்படி இருப்பதால் மக்களும் ஆன்லைனில் தான் சேவை பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே இதை ஒரு முன்னணி வணிகமாக மாற்ற பிரபல உணவு டெலிவரி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஸ்விக்கி நிறுவனம், தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக பிங் (Pyng) எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏராளமான தொழில்முறை வல்லுநர்கள் உள்ளனர். மக்கள் தங்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெற இந்த வல்லுநர்களை அணுகலாம்.

நகர்ப்புறங்களில் இருக்கும் மக்கள் தங்களின் பிசி வாழ்க்கைக்கு மத்தியில் திறமையான மற்றும் நம்பகமான சேவைகளை பெற நிபுணர்களை கண்டுபிடிப்பதற்காகவே அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுகின்றனர். இந்த தேடல் சில சமயங்களில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறது. மக்களுக்கு எந்த வித சிரமத்தையும் ஏற்படுத்தாமல் தங்களுக்கு தேவைப்படும் சேவைகளைப் பெற நிபுணர்களை எளிதில் அணுகும் வசதியை தான் பிங் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே வீட்டு சேவைகளை வழங்கும் அர்பன் கம்பெனி போன்ற நிறுவனங்கள் இந்த சந்தையில் வலுவாக உள்ளனர். இந்நிலையில் பிங் அப்ளிகேஷனும் இனிவரும் காலங்களில் பிற நிறுவனங்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டேக்ஸ் பிளானர்கள், கவுன்சிலர்கள், யோகா பயிற்சியாளர்கள், என தொழில் முறை உதவிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத்தான் பிங் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்விக்கியின் இணை நிறுவனர் நந்தன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பலருடைய வேலைப் பளுவை வெகுவாக குறைத்திருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்விக்கி பிங் அப்ளிகேஷனை நிறுவியுள்ளது. இதன் காரணமாக நிபுணர்களை விரைவாகவும் தடையின்றியும் மக்கள் கண்டுபிடிக்க முடியும். அதோடு பாதுகாப்பான தளத்தை வழங்குவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயனர்கள் சேவையில் திருப்தி இல்லை என்றால் இந்த தளத்தின் மூலம் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்திரவாதமும் வழங்கப்படுகிறது.
இந்த பிங் அப்ளிகேஷன் உதவியுடன் பயனர்களின் கேள்வியை அறிந்து, அவற்றின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான நிபுணர்களை AI பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் பயனர்கள் தேர்வு செய்யலாம்.
பிங் அப்ளிகேஷனில் 1000-த்திற்கும் மேற்பட்ட 100 சிறப்பு பிரிவுகளில் கைதேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், யோகா பயிற்றுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சுகாதார மற்றும் நல்வாழ்வு நிபுணர்கள் என பல்வேறு நிபுணர்களை இந்த அப்ளிகேஷனில் காணலாம். இது பயனர்களுக்கு தேவைப்படும் சேவையை எளிதில் பெற உதவும். அதோடு டிஜேக்கள், வெட்டிங் பிளானர்களும் இந்த பிங்க் அப்ளிகேஷனில் இருப்பார்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications