இந்தியாவில் உணவு டெலிவரி சேவை நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் ஸ்விக்கி நிறுவனம் போட்டியை மேலும் அதிகரிக்க கூடிய வகையில் 99 ரூபாய்க்கு இலவச டெலிவரியுடன் கூடிய உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.
Rs 99 store என்ற பெயரில் பட்ஜெட் விலை வாடிக்கையாளர்கள் மற்றும் ஜென் ஸீ வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்விக்கி புதிய ஆப்ஷனை கொண்டு வந்திருக்கிறது . மாணவர்கள், முதன்முறையாக வேலைக்கு செல்பவர்கள், ஜென் ஸீ பயனாளர்கள் , பட்ஜெட் பயனாளர்கள் 99 ரூபாய்க்கு உள்ளேயே தங்களுக்கு தேவையான உணவினை ஆர்டர் செய்து இலவச டெலிவரியுடன் பெற்றுக் கொள்ளலாம்.

175க்கும் அதிகமான இந்திய நகரங்களில் இந்த Rs 99 store டெலிவரி சேவையை கொண்டு வந்திருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பர்கர், பிரியாணி, சப்பாத்தி போன்ற உணவுகளை 99 ரூபாய் கட்டணத்திற்குள் வாங்கலாம் இதற்கு வாடிக்கையாளர்கள் டெலிவரி கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஹித் கபூர் தெரிவித்திருக்கிறார்.
இதற்காக பல்வேறு நகரங்களிலும் இருக்கக்கூடிய உணவகங்களோடு கலந்து பேச்சுவார்த்தை நடத்தி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு வசதியை கொண்டு வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். எந்த வகையான உணவு அதிகமானவர்கள் வாங்கப்பட்டிருக்கிறது எந்த கடையில இருந்து அதிகமாக பெற்றிருக்கிறது என்பன உள்ளிட்ட தகவல்கள் காட்டும் படி இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே வாடிக்கையாளர் ஸ்விக்கி செயலிக்குள் சென்று Rs 99 store என்பதை கிளிக் செய்து உடனடியாக ஆர்டர் செய்யும் வகையில் இந்த வடிவமைப்பு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நாள்தோறும் தங்களுடைய மதிய உணவு அல்லது இரவு உணவினை 99 ரூபாய்க்குள் முடித்து விடலாம் என்ற ஒரு மனநிலையை வாடிக்கையாளர் தினத்தில் கொண்டுவரும் நோக்கில் ஒரு ஐடியாவை கொண்டு வந்திருக்கிறது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் நிலை வரை வந்துவிட்டு இறுதியாக டெலிவரி கட்டணத்தை பார்த்துவிட்டு ஆர்டரை ரத்து செய்து விடுகிறார்கள் என்பதால் இப்படி ஒரு புதிய முயற்சியை கொண்டு வந்திருக்கிறது ஸ்விக்கி. இந்த Rs 99 store இல் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் eco saver முறையில் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications