அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் தணிந்த ஊழியர்கள் பணிநீக்கம் தற்போது இந்தியாவில் மிகவும் தீவிரமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக தெரிகிறது.
2022 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் ஊழியர்கள் பணிநீக்கம் அவ்வப்போது இருந்தாலும், பெரும்பாலும் அவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் கல்வி சேவை அளிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தான் அதிகமாக இருந்தது.
ஆனால் தற்போது அனைத்து முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது.
ஸ்விக்கி
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் உணவு மற்றும் மளிகை பொருட்களைக் குவிக் டெலிவரி செய்யும் சேவை நிறுவனமான ஸ்விக்கி இந்த மாத இறுதிக்குள் சுமார் 250 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் பெரும்பாலான டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் கொரோனா காலத்தில் வர்த்தக விரிவாக்கத்திற்காக அதிகப்படியான ஊழியர்களைச் சேர்த்து அதிகப்படியான வர்த்தகம் வருவாய் பெற்று நிலையில், தற்போது வர்த்தகச் சந்தையில் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
பிரச்சனை
இதே நிலையில் தொடர் வட்டி விகித உயர்வால் போதுமான முதலீட்டை ஈர்க்க முடியாமலும், ஐபிஓ வெளியிடும் திட்டத்தையும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வர்த்தகத்தை மொத்தமாக மறு ஆய்வு செய்து செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
250 ஊழியர்கள் பணிநீக்கம்
இதன் வாயிலாகவே அடுத்தடுத்து நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. ஸ்விக்கி நிறுவனம் இந்த 250 ஊழியர்கள் பணிநீக்கம் மூலம் தனது மொத்த ஊழியர்களில் 3-5 சதவீத ஊழியர்களை வெளியேற்ற உள்ளது.
ஸ்விக்கி பணிநீக்கம்
ஸ்விக்கி இனி வரும் மாதங்களிலும் கூடுதலான பணிநீக்கம் செய்யப்படும் எனக் கணிக்கப்படும் நிலையில் சப்ளை செயின், ஆப்ரேஷன்ஸ், வாடிக்கையாளர் சேவை மற்றும் டெக்னாலஜி பிரிவில் இருக்கும் ஊழியர்களும் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது.
ஸ்விக்கி விளக்கம்
இந்த நிலையில் ஸ்விக்கி இன்னும் எந்த ஊழியர்களுக்கும் பணிநீக்க உத்தரவை வெளியிடவில்லை என்றும், இந்த மாதம் அல்லது விரைவில் பணிநீக்கம் இருக்கும் என்பதை மறுக்கவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அக்டோபர் ரேட்டிங்
மேலும் அக்டோபர் மாதம் அனைத்து ஊழியர்கள், பிரிவுகளின் செயல்பாட்டுத் திறன்களை ஆய்வு செய்து ஊழியர்களுக்கான ரேட்டிங் மற்றும் ப்ரோமேஷன் அறிவிப்புகளையும் வெளியிட்டோம். இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டும் பணிநீக்கம் அனைத்தும் அக்டோபர் ரேட்டிங் அடிப்படையில் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி ஹெச்ஆர் பிரிவு தலைவர்
சமீபத்தில் ஸ்விக்கி ஊழியர்கள் மத்தியிலான கூட்டத்தில் இந்நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவு தலைவர் கிரிஷ் மேனன் அக்டோபர் ரேட்டிங் அடிப்படையில் பணிநீக்க அறிவிப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், நிர்வாகம் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சோமேட்டோ
தீபேந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனத்தில் நவம்பர் மாதம் 3 உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சோமேட்டோ நிறுவனத்தில் தற்போது 3800 ஊழியர்கள் உள்ளனர், இதில் 100- 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications