ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் ஸ்விக்கி நிறுவனம் Swiggy Wrap அறிக்கையில் மக்களின் விருப்பமான உணவு, சிறந்த வாடிக்கையாளர், பெரிய ஆர்டர் மதிப்பு எனப் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிடும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டு தெறிக்கவிட்டு உள்ளது.
ஸ்விக்கி தளத்தில் 8வது வருடமாக இந்த ஆண்டும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் முதலிடத்தில் பிரியாணி தேர்வாகியுள்ளது. இதோடு ஹைதராபாத் நபர் ஒருவர் இந்த ஆண்டு 1,633 பிரியாணிகளை ஆர்டர் செய்து பிரியாணி வெறியர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஸ்விக்கி தளத்தில் இந்த வருடம் பதிவான மிகப்பெரிய ஆர்டர் குறித்தும் பிரத்தியேகமான தகவல்களையும் சேகரித்து இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பிரியாணி ஆர்டர் ஒன்று சண்டிகரில் இருந்து வந்துள்ளது.
பெரிய ஆர்டர் : ஸ்விக்கி 2023 அறிக்கையின்படி, சண்டிகரில் உள்ள ஒரு குடும்பம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆட்டத்தின் போது ஒரே நேரத்தில் 70 பிளேட் பிரியாணி ஆர்டர் செய்து பெரிய ஆர்டர் செய்த பெரிய மனுஷன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது.
யாரு சாமி நீ..: இதேபோல் Swiggy தளத்தில் அதிகம் செலவழித்தவர் என்ற பட்டத்தை மும்பையைச் சேர்ந்த ஒருவர் தட்டி செல்கிறார். இவர் 2023ஆம் ஆண்டில் சுமார் ரூ.42.3 லட்சம் மதிப்பிலான உணவு ஆர்டர் செய்துள்ளார். கண்ணகட்டுதுடா சாமி..
இட்லி ஆர்டர் : இந்தியாவின் பிரியாணி தலைநகரான ஹைதராபாத்-க்குத் துரோகம் செய்யும் வகையில், ஒரு ஹைதராபாத் வாடிக்கையாளர் முற்றிலும் மாறுபட்ட வரையில் 6 லட்சம் ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ளார். இது பிரியாணி வெறியர்கள் மத்தியில் குறிப்பாக ஹைதராபாத் பிரியாணி வெறியர்களின் இதயத்தை நொறுக்கியுள்ளது.
சேமிப்பு : இதேவேளையில் சில Swiggy வாடிக்கையாளர்கள் தள்ளுபடி கூப்பன்கள், Swiggy One மெம்பர்ஷிப்கள் மற்றும் பெரிய தொகையைச் சேமிப்பதற்கான சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்தி ஸ்விக்கி நிர்வாகத்தையே வியக்க வைத்துள்ளனர். ஸ்விக்கி ஒன் வாடிக்கையாளர் ஒருவர் இலவச டெலிவரிகள், தள்ளுபடிகள் மற்றும் பிற பலன்கள் மூலம் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் ரூ.6.98 லட்சத்தைச் சேமித்துள்ளார்.
மறுபுறம், ஹைதராபாத் நபர் ஒருவர் Swiggy Dineout மூலம் கிடைக்கும் பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் மூலம் ரூ.5.58 லட்சத்தைச் சேமித்து அதிர வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications