பெங்களூரு: இன்றைய பல இளம் தலைமுறையினரின் பசியாற்றும் உணவு டெலிவரி செய்யும் ஸ்டார்டப் நிறுவனமான ஸ்விக்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் 2,367 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை என பல மெட்ரோ நகரகங்களில், களைகட்டி வரும் உணவு டெலிவரி வர்த்தகம், அதன் வருவாயில் களையிழந்துள்ளது.
அதிலும் தங்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்க வேண்டும் என்று உணவு டெலிவரி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இதனால் ஒரு புறம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க முடிந்தாலும், மறுபுறம் வருமானத்தை மறந்து விடுகின்றன.
ஸ்விக்கி நஷ்டம்
இதற்கு சிறந்த உதாரணம் தான் ஸ்விக்கி. ஒரு காலத்தில் இந்தியவின் சிறந்த உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, கடுமையான போட்டியினால் பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது. அதிலும் கொஞ்சம் நஞ்ச நஷ்டம் அல்ல, ஆறு மடங்கு நஷ்டம். கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019ம் நிதியாண்டில் 2,367 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நஷ்டத்திற்கு காரணம் என்ன?
ஸ்விக்கியின் இந்த அதிரடி நஷ்டத்திற்கு அதிகப்படியான செலவினமே முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பிட்டு சொன்னால் செலவினங்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. எனினும் மறுபுறம் இந்த நிறுவனம் நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையிலேயே ஸ்விக்கி இப்படி நஷ்டத்தினை கண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு எப்படி?
ஸ்விக்கி நிறுவனம் தொடர்ந்து பல காலாண்டுகளாக நஷ்டம் கண்டு வரும் நிலையில், 2018ம் நிதியாண்டில் 385 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அந்த நேரத்தில் அதன் வருவாய் மூன்று மடங்கு அதிகரித்து 1,128.3 கோடி ரூபாய் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 417 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த செலவினம்
ஸ்விக்கி நிறுவனம் கடந்த 2019ம் நிதியாண்டில் செலவினங்கள் 3,659.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 841.4 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே செயல்பாட்டு செலவினம் மட்டும் 1,681.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே உணவு டெலிவரி செய்யும் செலவினங்கள் 1,594 கோடி ரூபாயாக அதிகரித்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ஆர்டர்களால் நஷ்டம்
ஸ்விக்கிக்கு ஒரு அதிக செலவினங்களால் பெருத்த நஷ்டம் என்றாலும், மறுபுறம் ரத்து செய்யப்பட்ட ஆர்டர்களால் காரணமாக 113.4 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக அனைத்து புறங்களில் இருந்தும் ஸ்விக்கி நஷ்டம் அதிகரித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக இத்தகையதொரு நஷ்டத்தினை கண்டுள்ளது ஸ்விக்கி.
தினசரி ஆர்டர்கள்
ஸ்விக்கி இந்தியாவில் தினசரி 1.4 மில்லியன் ஆர்டர்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதே முந்தைய ஆண்டில் தினசரி 7,00,000 ஆர்டர்களை மட்டுமே பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்டார்டப் நிறுவனம் 500 நகரங்களில் 1,40,000 உணவகங்களுடன் 2.1 லட்சம் டெலிவரி பார்ட்னர்களுடன் இணைந்துள்ளது. இது தவிர அடுத்த ஆண்டில் இன்னும் 100 நகரங்களில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications