தினசரி ஹோம்ஸ்டைல் உணவு டெலிவரியை மீண்டும் தொடங்குகிறது ஸ்விக்கி

டெய்லி எனப்படும் ஹோம்ஸ்டைல் உணவு சேவையை ஸ்விக்கி நிறுத்தி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்தச் சேவையை குறிப்பிட்ட சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை கோவிட் தொற்றுகாரணமாக ஆர்டர்கள் குறைந்ததால் டெய்லி சேவையை ஸ்விக்கி நிறுத்தியது.

ஸ்விக்கி டெய்லியை பெரும்பாலும் அலுவலகம் செல்வோர்தான் பயன்படுத்தியதால் தனது பெரும்பான்மை அலுவலகம் செல்லும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சேவையை ஸ்விக்கி தொடங்கியது. இந்த சேவை ஒர்க் பிரம் ஹோம் வாடிக்கையாளர்களுக்காக கொரோனா லாக்டவுன் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

தினசரி ஹோம்ஸ்டைல் உணவு டெலிவரியை மீண்டும் தொடங்குகிறது ஸ்விக்கி

இப்போது நிறைய ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வதால் ஸ்விக்கி மீண்டும் டெய்லி சேவையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. உணவு டெலிவரியில் இப்போது சோமாட்டோ எவ்ரிடே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சோமாட்டோ எவ்ரிடே முதலில் குருகிராமின் குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது. ஹோம் ஸ்டைல் உணவுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் சோமாட்டோ எவ்ரிடே சிறப்பாக செயல்படுகிறது.

ஸ்விக்கியும், சோமாட்டோவும் ரூ.89 மற்றும் ரூ.150க்கு இந்த பிரிவில் சாப்பாடு வழங்குகின்றன. ஐபிஓ வெளியிட உள்ள ஸ்விக்கி இப்போது பல்வேறு டிவிஷன்களை ஒன்றிணைத்து வருகிறது. அதேபோல் ஸ்விக்கி டெய்லியும் மெயின் ஆப்புடன் இணைக்கப்படுகிறது.

2020இல் இருந்து ஸ்விக்கி முதிர்ச்சியடைந்த நிறுவனமாக மாறிவிட்டது. சப்ளை செயின், மலிவான விலை ஆகிய அம்சங்களுடன் டெய்லி சேவை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிஜி ஹாஸ்டல்கள், அலுவலகம் செல்வோரை குறிவைத்து இந்த சேவை இயக்கப்படும்.

டப்பாவாலாக்கள் மற்றும் சிறிய கேட்டரிங் கம்பெனிகள் தவிர ஹோம் ஸ்டைல் உணவு சந்தை பெரும்பாலும் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஸ்விக்கி டெய்லி 2019இல் இந்தச் சேவையைத் தொடங்கியது. இதன் மூலம் சோமாட்டோ வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது.

டெய்லி மூலம் ஸ்விக்கி புதிய வாடிக்கையாளர்களை பெற்று தனது சேவையை செய்ய உள்ளது. நிறைய வாடிக்கையாளர்கள் இந்த ஆப் மூலம் உணவு டெலிவரியை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் பொதுச் சந்தையில் அறிமுகமாகும் நம்பிக்கையில் இருக்கும் ஸ்விக்கி, அதன் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

சோமாட்டோவின் 8.6 மில்லியன் மாதாந்திர பரிவர்த்தனை பயனர்களுக்கு மாறாக ஸ்விக்கிக்கு தற்போது மொத்தம் 14-16 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

ஸ்விக்கி தனது வரைவு ஐபிஓ ஆவணங்களை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) கடந்த மாதம் தாக்கல் செய்தது. புதிய வெளியீடு மூலம் ரூ. 3,750 கோடி (சுமார் $450 மில்லியன்) வரை மற்றும் ரூ. 6,664 கோடி (சுமார் $800 மில்லியன்) வரை விற்பனைக்கான (OFS) பாகமாக, முன்பு அறிவிக்கப்பட்டது.

2023 டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ஸ்விக்கி $207 மில்லியன் இழப்பைப் பதிவுசெய்தது. அந்த இழப்பு 2022-23 நிதியாண்டின் வருவாயான $1.05 பில்லியனுடன் ஒப்பிடுகையில், அதே காலகட்டத்தில் $1.02 பில்லியன் வருவாயில் இருந்தது.

ஸ்விக்கியின் வருவாய் 2023 நிதியாண்டில் 45 சதவீதம் உயர்ந்து ரூ. 8,625 கோடியாக இருந்தது, அதே சமயம் நிகர இழப்பு ரூ.4,179 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் ஆண்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2022 நிதியாண்டில் இந்த ஹைப்பர்லோகல் காமர்ஸ் யூனிகார்ன் ரூ.5,705 கோடி வருவாயையும், ரூ.3,629 கோடி நிகர இழப்பையும் பதிவு செய்திருந்தது.

அதன் பரம-எதிரியான சோமாட்டோவின் வருவாய் 23 நிதியாண்டில் 66 சதவீதம் உயர்ந்து ரூ. 7,761 கோடியாக இருந்தது, நிகர இழப்பு ரூ.971 கோடியாகக் குறைந்தது.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+