இந்தியாவின் முன்னணி குவிக் காமர்ஸ் சேவை நிறுவனமான ஸ்விக்கி குழுமத்தின் இன்ஸ்டாமார்ட்-ல் சுமார் 340 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குவிக்காமர்ஸ் துறையில் முன்பு பிளிங்க்கிட், செப்டோ, இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அமேசான், பிளிப்கார்ட்-ம் இத்துறையில் வந்திருக்கும் காரணத்தால் போட்டி அதிகமாகியுள்ளது.

இதேபோல் வர்த்தகமும் நிலையற்ற வளர்ச்சியில் இருக்கும் காரணத்தாலும், லாப அளவுகளை நிலைநாட்டுவது என்பது பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் ஈகாமர்ஸ், குவிக் காமர்ஸ் பிரிவில் அடுத்தடுத்து பணிநீக்கமும், உயர் அதிகாரிகள் வெளியேற்றமும் நடந்து வருகிறது.
சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் குரூப் சிஇஓ-வாக இருந்த கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக வெளியேற முடிவு செய்தார்.
இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக நந்திதா சின்ஹா ஆகஸ்ட் மாதம் பதவியேற்றிய பின்பு நடக்கும் மிக முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கையாக விளங்குகிறது.
இதற்கு ஏற்றார் போல் செப்டம்பர் காலாண்டில் இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் மொத்த இழப்பு 778 கோடியில் இருந்து 895 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஸ்விக்கியின் மொத்த இழப்பு 922 கோடி ரூபாயில் இருந்து 1092 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்ஸ்டாமார்ட் தனது வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.
இதேவேளையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் ஸ்னாக்ஸ் மற்றும் பானங்களுக்கான Noice என்ற பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது, பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான Nectr என்ற பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
இதை தாண்டி இன்ஸ்டாமார்ட் தற்போது கமிஷன், பார்ட்னர் அடிப்படையிலான வர்த்தகத்தில் இயங்கி வரும் வேளையில், கூடுதல் வருவாய், கூடுதல் லாபத்தை நோக்கிய பயணத்தில் inventory அடிப்படையிலான வர்த்தகக்தை முன்னெடுக்க உள்ளது.
இதன் மூலம் இன்ஸ்டாமார்ட் இனி பிராண்டுகளிடம் நேரடியாக பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் முறையில் இறங்க உள்ளது. இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் வருவாய் 4-5 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications