கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் இளநீர், நொங்கு முதல் ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ், பீர் வரையில் அதிகளவில் வாங்கி சாப்பிட்டு வரும் வேளையில் மும்பையை சேர்ந்த ஒருவர் பலரையும் அலற வைத்துள்ளார்.
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மார்ச் 1 முதல் ஏப்ரல் 15, 2024 வரையிலான காலகட்டத்தில் தனது ஆர்டர்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனம் இந்த கோடைக்காலத்தில் அதன் வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொண்டு திட்டமிட்ட இந்த ஆய்வை துவங்கியது.

ஆனால் எதிர்பார்க்காத வகையில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியது. இதை தனது வருடாந்திர ஆர்டர்கள் குறித்த அறிக்கையை போல் வெளியிட முடிவு செய்தது, டேட்டாவை அடுக்கியுள்ளது.
இந்த கோடை காலத்தில் இந்தியா முழுவதும் ஐஸ்கிரீம் விற்பனை சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, மும்பையில் வசிக்கும் ஒருவர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம் (141 ஆர்டர்கள்) ஆர்டர் செய்துள்ளார். இது இந்திய அளவில் மிகவும் அதிகப்படியான ஐஸ்கிரீம் ஆர்டர் ஆகும்.
இதே அறிக்கையின்படி, சாக்லேட் ஃப்ளேவர் தான் ஐஸ்கிரீம்-ல் மிகவும் சுவையிலுள்ள ஓன்று எனவும் மக்கள் தங்களது ஆர்டர் மூலம் காட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து மாம்பழ ஐஸ்கிரீம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து பாதாம், இளநீர், வெண்ணிலா ஆகிய சுவைகளும் மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யும் ஐஸ்கிரீம் சுவைகளாக உள்ளன. குறிப்பாக மும்பை நகரில் இருந்து தான் மாம்பழ மற்றும் இளநீர் போன்ற பழ வகை ஐஸ்கிரீம்களுக்கு அதிக ஆர்டர்கள் வந்துள்ளன.
மேலும், 2024 ஆம் ஆண்டில், guilt-free மற்றும் vegan ஐஸ்கிரீம்களுக்கான ஆர்டர்கள் 2023 ஆம் ஆண்டை விட 70% அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மாலை 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் தான் அதிக அளவில் ஐஸ்கிரீம் ஆர்டர்கள் (சுமார் 6.9 லட்சம்) ஸ்விக்கி நிறுவனத்திற்கு வந்துள்ளன. மதியம் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் 4.6 லட்சம் ஆர்டர்கள் வந்துள்ளன.
சுவாரசியமாக, காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் சுமார் 80,000 ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
உணவு ஆர்டர்கள் பட்டியலில் மும்பை மக்கள் முதலிடத்தைப் பிடித்தது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஸ்விக்கி வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, மும்பையில் ஒரு பயனர் ₹42.3 லட்சம் மதிப்புள்ள உணவை இந்த தளத்தில் ஆர்டர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் இந்தியாவில் மக்களை குளிர்விக்கும் வகையில் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைபொழிவு இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த மழை வெப்பத்தைக் குறைத்து கொஞ்சம் குளிர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications