நாட்டின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, அதில் பணிபுரியும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு, நிறுவத்தின் செலவில் தடுப்பூசி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் தங்களது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை, அரசு அறிவித்துள்ள நிலையில், ஸ்விக்கியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இது ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக டெலிவரி செய்யும் ஊழியர்களில் 45 வயதுக்கும் மேற்பட்ட 5500 ஊழியர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அரசின் அறிவிப்புக்கு ஏற்ப 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி, நிறுவனத்தின் செலவிலேயே போடப்படும் என அறிவித்துள்ளது. அதோடு இதனால் ஊழியர்களுக்கு ஏற்படும் சம்பள இழப்பினையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என ஸ்விக்கியின் COO விவேக் சுந்தர் கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எதிர்த்து போராடி வரும் எங்களது ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசிகளையும் அளிக்க விரும்புகிறோம் என ஸ்விக்கி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications