ஆட்டை கடிச்சு, மாட்டைக் கடிச்சு.. கடைசில ஸ்விக்கி-யிலும் பணிநீக்கம்..!

உலகம் முழுவதிலும் பணிநீக்கம் என்ற வைரஸ் மீண்டும் நிறுவனங்களைத் தாக்க துவங்கியுள்ளது, இதனால் 2023 ஆம் ஆண்டை போலவே 2024 ஆம் ஆண்டிலும் பணிநீக்கம் துவங்கியுள்ளது. அமெரிக்காவில் கூகுள், அமேசான் என முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் இந்தியாவிலும் பணிநீக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, தனது சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்தைப் போலவே ஐபிஓ வெளியிட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிட தயாராகியிருக்கும் வேளையில், தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

ஆட்டை கடிச்சு, மாட்டைக் கடிச்சு.. கடைசில ஸ்விக்கி-யிலும் பணிநீக்கம்..!

ஸ்விக்கி நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கவும், லாபகரமான நிலையை அடையவும், 2023 ஆம் ஆண்டுப் பணிநீக்க நடவடிக்கையைப் போல் மீண்டுமொரு பணிநீக்க நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

ஸ்விக்கி நிறுவனம் இப்புதிய பணிநீக்க சுற்றில் தொழில்நுட்பம், கால் சென்டர் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகப் பணியில் இருக்கும் குழுக்களில் உள்ள பணியாளர்களில் சுமார் 350-400 ஊழியர்களைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் Swiggy தனது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 6% குறைக்க உள்ளது.

ஸ்விக்கி நிறுவனத்தில் நடக்கும் தற்போதைய உரையாடல்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ள மூத்த தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அப்பேட்சின் படி, பணிநீக்கங்கள் வரும் வாரங்களில் படிப்படியாக நடத்தப்படும் என்று தெரிகிறது. இதனால் மொத்தமாக 350-400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நிலை இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.

ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு-விநியோக வணிகம் லாபகரமானதாக உள்ளது, ஆனால் அதன் மளிகைப் பொருள் விநியோக பிரிவான இன்ஸ்டாமார்ட் இன்னும் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்ய வேண்டிய கட்டத்தில் தான் உள்ளது. இதைச் சமாளிக்கவே தற்போதை பணிநீக்கம்.

ஐடி நகரமான பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் ஸ்விக்கி, ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன், செலவைக் குறைப்பதற்கும், சிறந்த நிதி நிலையை முதலீட்டாளர்களுக்குக் காட்ட முயற்சி செய்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+