ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போ.. Swiggy, Zomato-வை கடித்த LPG பிரச்சனை..?!

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில், இரு நிறுவனங்களும் தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண உயர்வுக்கும், எரிபொருள் விலை உயர்வு தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம் சோமேட்டோ தனது பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, ஸ்விக்கி தனது ஒவ்வொரு ஆர்டருக்கும் வசூலிக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.14.99 இலிருந்து ரூ.17.58 ஆக உயர்த்தியுள்ளது. இது சுமார் 17% உயர்வாகும்.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போ.. Swiggy, Zomato-வை கடித்த LPG பிரச்சனை..?!

ஸ்விக்கி வசூலிக்கும் ரூ.17.58 கட்டணம் GST உடன் சேர்த்ததாகும். ஆனால் சோமேட்டோ கட்டணம் GST இல்லாமல் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், இரண்டு நிறுவனங்களின் உண்மையான கட்டணமும் ஒரே அளவில் ரூ.17.58 அளவில் இருப்பதாக தெரிகிறது.

பிளாட்ஃபார்ம் கட்டணம் என்றால் என்ன?
பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது ஒவ்வொரு ஆர்டருக்கும் விதிக்கப்படும் நிரந்தர கட்டணமாகும். இது டெலிவரி கட்டணம் மற்றும் உணவக கட்டணங்களுக்கு கூடுதலாக சேர்க்கப்படுகிறது. தொழில்நுட்ப பராமரிப்பு, செயல்பாட்டு செலவுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டண உயர்வின் பின்னணி
2023 ஏப்ரலில் ரூ.2 ஆக அறிமுகமான ஸ்விக்கி பிளாட்ஃபார்ம் கட்டணம், தற்போது ரூ.17.58 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், 2025 செப்டம்பர் மாதத்தில் ஸ்விக்கி ரூ.12 இருந்து ரூ.15 ஆகவும், சோமேட்டோ ரூ.10 இருந்து ரூ.12.5 ஆகவும் உயர்த்தியிருந்தது.

இந்த தொடர்ச்சியான உயர்வு, நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க முயற்சிக்கும் ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை மற்றும் மத்திய கிழக்கு போர்
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் டெலிவரி செயல்பாடுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது.

மேலும், வர்த்தக LPG சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு, உணவகங்களின் செயல்பாடுகளையும் பாதித்துள்ளது. இதுவே இந்த கட்டண உயர்வுக்கு மறைமுக காரணமாக கருதப்படுகிறது.

மக்களுக்கு தாக்கம்
இந்த கட்டண உயர்வு, இந்தியா முழுவதும் உணவு ஆர்டர் செய்வோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே டெலிவரி கட்டணம், வரிகள், மற்றும் உணவக கட்டணங்கள் உள்ள நிலையில், பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வு நேரடியாக வாடிக்கையாளர்களின் செலவை அதிகரிக்கிறது.

உணவு டெலிவரி துறையில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்களில், Magicpin தற்போது குறைந்த கட்டணமான ரூ.14.2 (GST உடன்) வசூலித்து வருகிறது. இதனால் விலை அளவில் போட்டி மேலும் தீவிரமாகும் வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+