இந்திய மக்கள் மதுபானத்திற்கு எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என்பது கொரோனா மூலம் நாம் எல்லோரும் நன்கு அறிந்துகொண்டோம். நீண்ட நாட்கள் மதுபானம் விற்பனை செய்யாத நிலையில் மதுபான கடைகளைத் திறந்த சில நாட்களில் நாடுமுழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாகப் பல மாநிலங்களில் மதுபானம் மூடப்பட்ட நிலையில் தற்போது மதுபானம் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் சேவையை ஸ்விக்கி துவங்கியுள்ளது.
இந்த அறிவிப்பால் 'குடி'மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
ஸ்விக்கி
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வரும் ஸ்விக்கி, தற்போது தனது ஆப் சேவை மூலம் மதுபானத்தையும் ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.
ஸ்விக்கி தனது ஆப்-ல் ‘Wine Shops' பிரிவில் மதுபான ஆர்டர்களைப் பெற துவங்கியுள்ளது.
ராஞ்சி
ஜார்கண்ட் மாநில அரசின் ஒப்புதல்கள் அடிப்படையில் ஸ்விக்கி தற்போது ராஞ்சி-யில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.
மேலும் அடுத்த ஒரு வாரத்திற்குள் இம்மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இச்சேவை துவங்கப்படும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஸ்விக்கி தற்போது பல்வேறு மாநில அரசுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் நாடு முழுவதும் மதுபானத்தை ஆன்லைன் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
சட்டதிட்டங்கள்
அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மதுபானத்தை டெலிவரி செய்ய வேண்டும் என்பதால், ஸ்விக்கி ஆர்டர் செய்பவரின் வயதை சரிபார்ப்பது, ஆர்டர் செய்பவரின் அடையாளத்தைச் சோதனை செய்ய உள்ளது.
வாடிக்கையாளர் உடனடியாக வயதை சரிபார்க்க, ஸ்விக்கி தளத்தில் அரசு அடையாள அட்டைகளை அப்லோட் செய்து சரிபார்க்க முடியும். இதோடு புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
OTP
மேலும் மதுபானம் ஆர்டர் செய்து உறுதி செய்யப்படும் போது, வாடிக்கையாளருக்கு ஒரு OTP வரும், அதை டெலிவரி செய்யப்படும் போது சோதனை செய்து அதன் பின்பே மதுபானம் கொடுக்கப்படும்.
மேலும் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட அளவிற்குத் தான் மதுபானம் விநியோகம் செய்யப்படும் எனவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
ஊரடங்கு
ஸ்விக்கி நிறுவநம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்த ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப் பல்வேறு அரசு மற்று அரசு அமைப்புகளிடம் முயற்சி செய்து வருகிறது.
ஸ்விக்கியின் இந்தச் செயல்பாடுக்கு பின்பு சோமேட்டோ-வும் மதுபானத்தை ஆன்லைனில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications