மத்திய அரசு கடந்த 21ஆம் தேதி நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 1950 மற்றும் 60களில் கொண்டுவரப்பட்ட பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக புதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் கிக் பணியாளர்கள் எனப்படும் டெலிவரி வேலையில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு பலன்களை வழங்கி இருக்கிறது. குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், காப்பீடு உள்ளிட்ட அனைத்து பலன்களும் கிக் பணியாளர்களுக்கும் இனி கிடைக்கும். கிக் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த அரசு தனி நிதியை தொடங்க உள்ளது.

கிக் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை இந்த நிதிக்காக வழங்க வேண்டும். இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக கிக் பணியாளர்கள் இருக்கின்றனர். அமேசான் , ஸ்விக்கி, ஸோமேட்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், செப்டோ போன்ற தளங்களில் இணைந்து டெலிவரி வேலையில் ஈடுபடுபவர்களே கிக் பணியாளர்கள் என அழைக்கிறோம்.
இந்த சூழலில் புதிய தொழிலாளர் சட்டம் கிக் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பலன்களை வழங்குகிறது. அவர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள் இதற்காக பங்களிப்பு தர வேண்டும் . தங்களின் வருவாயில் ஒரு கணிசமான தொகையை பங்களிப்பாக தர வேண்டும் என கூறியிருக்கிறது அரசு.

கோடக் நிறுவனம் வெளியிடக்கூடிய தகவலின் பதில் நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தில் 1- 2 சதவீதம் தொகையை கிக் பணியாளர்களின் சமூக நலத் திட்டங்களுக்காக வழங்கி ஆக வேண்டும். அதாவது கிக் பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தில் 5 சதவீதம் தொகையை அரசின் சமூக பாதுகாப்பு நிதிக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும். அப்படி என்றால் ஒரு உணவு டெலிவரிக்கு 3.2 ரூபாய் , ஒரு குயிக்காமர்ஸ் ஆர்டருக்கு 2.4 ரூபாய் என்ற அளவில் நிறுவனங்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி வழங்க வேண்டும் என கூறுகிறது.
நிறுவனங்கள் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்த போகின்றன என கோடக் நிறுவனம் கூறுகிறது. கூடிய விரைவில் இந்த நிறுவனங்கள் தங்களுடைய டெலிவரி கட்டணங்களை மாற்றி அமைக்க உள்ளன என்றும் இந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்ப டெலிவரி கட்டணம், பிளாட்பார்ம் கட்டணம் உள்ளிட்டவறை உயர்த்தும் என்றும் கூறுகிறது. எனவே அன்றாடம் ஸ்விக்கி, சோமேட்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், செப்டோ ஆகியவற்றை பயன்படுத்துவோர் இனி கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications