Credit Suisse பங்குகள் 25% சரிவு.. சவுதி நேஷ்னல் வங்கி வெளியிட்ட ஓரேயொரு அறிவிப்பு..!

அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 வங்கிகள் திவாலான நிலையில் சர்வதேச அளவில் வங்கி பங்குகள், வங்கி குறியீடுகள் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்து வரும் நிலையில் சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 24 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அடுத்த பெரிய அதிர்ச்சி செய்தியாக உள்ளது.

இந்த பெரிய சரிவுக்கு முக்கியமான காரணம் கிரெடிட் சூயிஸ்-ன் முக்கிய முதலீட்டாளரும், பங்குதாரருமான சவுதி நேஷ்னல் வங்கி, கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறையின் கீழ் 10 சதவீத பங்குகளுக்கு மேல் முதலீடு செய்து வாங்க முடியாது என்பதால் இனி முதலீடு செய்ய முடியாது என அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே கிரெடிட் சூயிஸ் பங்குகள் 2 சுவிஸ் பிராங்க் கீழ் வரலாற்றிலேயே முதல் முறையாக சரிந்துள்ளது.

சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கி

உலகளவில் சுவிஸ் வங்கி கட்டமைப்பு மிகவும் வலிமையானதாக கூறப்படும் வேளையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை தொடர்ந்து பெரும் நெருக்கடியை சுவிஸ் வங்கிகள் மட்டும் அல்லாமல் உலகளவில் அனைத்து வங்கிகளும் சற்று தடுமாறியது. ஆனால் அமெரிக்க அரசு உதவிகரம் நீட்டிய பின்பு பிரிட்டன், இந்திய வங்கி அமைப்புகள் தடுமாற்றத்தில் இருந்து மீண்டது.

கிரெடிட் சூயிஸ்

கிரெடிட் சூயிஸ்


இந்த நிலையில் சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியாக இருக்கும் கிரெடிட் சூயிஸ் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில், இன்று சவுதி அரேபிய அரசின் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனத்தின் பெரும் முதலீட்டில் இயங்கும் சவுதி நேஷ்னல் வங்கி வெளியிட்ட அறிவிப்பு பெரும் பாதிப்பை கிரெடிட் சூயிஸ்-க்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையை உழுக்கியுள்ளது.

சவுதி நேஷ்னல் வங்கி

சவுதி நேஷ்னல் வங்கி

சவுதி நேஷ்னல் வங்கி -யின் சேர்மன் Ammar Al Khudairy, எங்களால் இனி கிரெடிட் சூயிஸ் பங்கு இருப்பை அதிகரிக்க முடியாது என அறிவித்தார். இதன் எதிரொலியாக ஐரோப்பிய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது மட்டும் அல்லாமல், ஐரோப்பிய வங்கித்துறை மீதான கவலைகளும் முதலீட்டாளர்களுக்கு அதிகரித்துள்ளது.

24 சதவீதம் வரை சரிவு

24 சதவீதம் வரை சரிவு

ஆனால் கிரெடிட் சூயிஸ் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 24 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, 2 சுவிஸ் பிராங்க் கீழ் வரலாற்றிலேயே முதல் முறையாக சரிந்துள்ளதற்கு இது மட்டும் தான் காரணமா என்றால் கட்டாயம் இல்லை.

அமெரிக்க வங்கி

அமெரிக்க வங்கி

கிரெடிட் சூயிஸ் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டும் திவாலானதில் இருந்து அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் கிரெடிட் சூயிஸ் தனது வருடாந்திர அறிக்கையில் உள் நிர்வாகத்தில் material weaknesses இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

 Credit Suisse பங்குகள்

Credit Suisse பங்குகள்

இதன் வாயிலாக Credit Suisse பங்குகள் சிவிஸ் பங்குச்சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று 2.28 சுவிஸ் பிராங்க் விலையில் துவங்கி 1.55 பிராங்க் வரையில் சரிந்தது. Credit Suisse வரலாற்றில் முதல் முறையாக 2 பிராங்க் -கிற்கு கீழ் சரிந்துள்ளது. இதன் பாதிப்பு கட்டாயம் இன்றைய அமெரிக்க சந்தையிலும் எதிரொலிக்கும், நாளை ஆசிய சந்தையிலும் எதிரொலிக்கும்.

9.9 சதவீத பங்குகள்

9.9 சதவீத பங்குகள்

சவுதி நேஷ்னல் வங்கி-யில் சவுதி அரேபிய அரசின் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் சுமார் 37 சதவீத பங்குகளை கொண்டு உள்ளது. இந்த நிலையில் சவுதி நேஷ்னல் வங்கி Credit Suisse வங்கியில் கடந்த ஆண்டு 9.9 சதவீத பங்குகளை சுமார் 1.4 பில்லியன் பிராங்க் தொகைக்கு வாங்கியது. கடந்த சில மாதத்தில் இந்த முதலீட்டில் 500 மில்லியன் பிராங்க் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அரசு பத்திரங்கள்

அரசு பத்திரங்கள்

சவுதி நேஷ்னல் வங்கி 10 சதவீத பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது என அறிவித்த நிலையில் Credit Suisse வங்கி பங்குகள் 25 சதவீதம் வரையில் சரிந்தது மூலம் அரசு பத்திரங்கள் மீதான லாபமும் குறைந்துள்ளது. அரசு பத்திரங்கள் அதிகப்படியான வங்கிகளின் முதலீடுகளின் வாயிலாக இயங்குகிறது.

3 ஆண்டு மறுசீரமைப்பு திட்டம்

3 ஆண்டு மறுசீரமைப்பு திட்டம்

மேலும் Credit Suisse வங்கி மீண்டும் லாபகரமான நிறுவனமாக மாற 3 ஆண்டு மறுசீரமைப்பு திட்டத்தின் மத்தியில் இருக்கும் வேளையில் அமெரிக்க வங்கிகளின் திவால் மற்றும் சவுதி நேஷ்னல் வங்கி அறிவிப்பு மூலம் புதிய நிதி முதலீட்டுக்கான ஆதாரம் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. இதன் வாயிலாக தான் தற்போது பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

 முக்கிய வங்கிகள் சரிவு

முக்கிய வங்கிகள் சரிவு

Credit Suisse வங்கி பங்குகள் சரிவால் மற்றொரு முன்னணி சுவிஸ் வங்கியான UBS 6.8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பிரான்ஸ் வங்கியான BNP பரிபாஸ், Societe Generale ஆகியவை 11 சதவீதம் சரிந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் Banco de Sabadell வங்கி 9 சதவீதம் சரிந்துள்ளது, ஜெர்மனி நாட்டின் Commerzbank 10 சதவீதமும், Deutsche Bank வங்கி 8.4 சதவீதமும் சரிந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+