ஒரு வாட்ச்-சின் விலை 226 கோடி ரூபாயா? அப்படி என்ன வாட்ச். அதில் அப்படி என்ன ஸ்பெஷல் வாருங்கள் பார்ப்போம்.
சாதாரணமாக கையில் கட்டும் ஒரு வாட்ச்-சின் விலை, 1,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 226 கோடி ரூபாய் என்றால் இது கொஞ்சம் அதிகம் தானே.

ஜெனிவாவை சேர்ந்த மிகப் பழைமையான வாட்ச் நிறுவனம் தான் படேக் பிலிப் நிறுவனம். இது கடந்த 1839 முதல் வாட்ச் -களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது ஒரு சொகுசு கடிகார நிறுவனமாகும். மேலும் இந்த நிறுவனம் பல்வேறு பாரம்பரிய வடிவமைப்புகளுடன் உயர் துல்லியமான மற்றும் உயர்தர கடிகாரங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் கடிகாரங்களை ராணி விக்டோரியா, விக்டர் இம்மானுவேல், டென்மார்க்கின் இளவரசி லூயிஸ் உள்ளிட்டோர் இந்த மதிப்புமிக்க கடிகாரத்தை அணிந்துள்ளனராம்.
இந்த படேக் பிலிப்பின் முதல் மற்றும் ஒரே கிராண்ட்மாஸ்டர் சிம் 6300A-010 ஏலத்திற்காகவே பிரத்யோகமாக உருவாக்கப்பட்டது. இது தான் மிக உயர்ந்த விலையைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த கடிகாரம் தான் விலை உயர்ந்த கடிகாரம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் இந்த கடிகாரத்தை வாங்குபவர் பற்றி எதுவும் கூறப்படவில்லை. இந்த கடிகாரம் தனித்துவமான எஃகு மூலம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வாட்சில் ஒலி அலாரம் மற்றும் தேவைக்கான தேதியை கூறும் தேதியும், ரிப்பீட்டரும் உள்ளது. இது தவிர இதில் தூசி மற்றும் ஈரப்பதத்தை எதிர்ப்பதும் இதில் அடங்கும். மேலும் இது மீளக்கூடிய எஃகுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு உலகளவில் இரண்டாவது பிராண்டாக ரோலக்ஸ் வாட்ச் உள்ளது. உலகில் மிக பிரபலமான மற்றும் புகழ்பெற்ற கடிகார நிறுவன அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். தரத்திற்காக பேர் போன ரோலக்ஸ் வாட்ச் இரண்டாவது இடத்திலும், இதே பிரேகெட் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தொழில் நுட்பங்களின் முன்னோடியாக விளங்கும் இந்த நிறுவனம், 1810 முதல் வாட்சுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications