கொரோனா தொற்று காலத்தில் கூட பாதிக்காத வகையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பது மூலம் சர்வதேச நிதி சந்தை கடுமையாக பாதித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரையில் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் பேங்க், சில்வர்கேட் பேங்க் ஆகிய 3 வங்கிகள் வங்கி சேவைகளை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியான Credit Suisse புதிய நிதியை திரட்ட முடியாமல் பணப்புழக்க பிரச்சனையில் மாடிக்கொண்டது.
இந்த நிலையில் கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளது.
கிரெடிட் சூயிஸ்
கிரெடிட் சூயிஸ்-ன் முக்கிய முதலீட்டாளரும், பங்குதாரருமான சவுதி நேஷ்னல் வங்கி -யின் சேர்மன் Ammar Al Khudairy, எங்களால் இனி கிரெடிட் சூயிஸ் பங்கு இருப்பை 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கிரெடிட் சூயிஸ் பங்குகள் சுமார் 30 சதவீதம் வரையில் சரிந்து வரலாற்று சரிவை சந்தித்தது.
Swiss National Bank உதவி
இந்த பிரச்சனையை சமாளிக்கும் விதமாக Credit Suisse தனது பணப்புழக்க பிரச்சனையை சரி செய்ய சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank -ல் இருந்து 54 பில்லியன் டாலர் அதாவது 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவிலான தொகையை கடனாக பெற்றது.
UBS, கிரெடிட் சூயிஸ்
இந்த 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் கடன் மூலம் கிரெடிட் சூயிஸ் பணப்புழக்க பிரச்சனை தீர்க்கப்பட்டாலும் வங்கியின் வலிமை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.இந்த நிலையில் தான் சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் UBS, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவோ அல்லது சிறு பகுதியை வாங்கவோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை
இதற்காக UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை துவங்க முக்கியமான காரணம் சுவிஸ் நேஷ்னல் வங்கி மற்றும் அந்நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்பான FINMA உந்துதல் தான். UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகள் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
சுவிஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெள்ளிக்கிழமை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளை இணைப்பது தான் எங்களுடைய பிளான் A என தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிரெடிட் சூயிஸ் வங்கியில் தீர்க்க முடியாத பிரச்சனை உள்ளது உறுதியாகியுள்ளது.
ஐரோப்பிய வங்கி அமைப்பு
இந்த இணைப்பு உறுதியாகும் பட்சத்தில் ஐரோப்பிய வங்கி அமைப்பு வீழ்ச்சி அடைவதில் இருந்து காப்பாற்றப்படும். இதேபோல் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கியின் சொத்துக்கள் பணம் அனைத்தும் பிரிட்ஜ் வங்கிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாவதாக அறிவித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
திக் திக் நேரம்
இதை தொடர்ந்து அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாக காத்திருக்கும் நிலையிலும், UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளை இணைப்பு முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் அடுத்த ஒரு வாரத்திற்கு முதலீட்டு சந்தைக்கும், நிதியியல் சந்தைக்கும் திக் திக் நேரம் தான்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications