சுவிட்சர்லாந்து நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுவிஸ் நாட்டில் உள்ள அதிகாரிகள் மின்தடை மற்றும் மின்வெட்டுகளைத் தடுக்க மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும். இந்தத் திட்டத்தில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமும் உள்ளதாக டெலிகிராப் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் சிவிஸ் அந்தர் பல்டி அடிக்க உள்ளது.
ஆட்டோமொபைல் துறை
சர்வதேச ஆட்டோமொபைல் துறையில் தலைகீழாகப் புரட்டிப்போட்டது மட்டும் அல்லாமல் 100 வருடங்களுக்கும் அதிகமாகப் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்தியும், உற்பத்தி செய்தும் வந்த நிலையில் எலக்ட்ரிக் கார் தான் எதிர்காலம் என அனைவரும் நம்பும் நேரத்தில் முக்கியமான பிரச்சனை உருவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து
உலகில் தனிநபர் வருமான அளவில் உயர்மட்ட அளவில் இருக்கும் சுவிஸ் பல முக்கியமான மாற்றத்தையும், கிரீன் எனர்ஜியை ஆதரிக்கும் அனைத்தும் முயற்சிகளை மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டு வந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
மின்தடை மற்றும் மின்வெட்டு
மின்தடை மற்றும் மின்வெட்டுகளைத் தடுக்க மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது மட்டும் நடந்தால், சுவிட்சர்லாந்து தான் உலகிலேயே எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்த முதல் நாடாக மாறும்.
எனர்ஜி தேவை
சுவிட்சர்லாந்து நாட்டில் அதன் எனர்ஜி தேவைகளைப் பூர்த்திச் செய்ய நீர் மின்சாரத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது, இந்நாட்டின் மின்சாரத்தில் 60 சதவீதம் நீர் மின்சாரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த நிலையில் குளிர்காலத்தில் பணி உருவாகும் காரணத்தால் மின்சார உற்பத்தி குறைகிறது.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி
இத்தகைய காலக்கட்டத்தில் அண்டை நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்தும் மின்சாரத்தை இறக்குமதி செய்கிறதுய இவை இரண்டும் இப்போது உக்ரைன் போரின் காரணமாக மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல என எனர்ஜி நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
பிரான்ஸ்
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் யூடிலிட்டி EDF அமைப்பு 2022 ஆம் ஆண்டில், அணு உலை செயலிழந்ததன் காரணமாக, அதன் மின் உற்பத்தி 30 ஆண்டுகளில் குறைவான அளவை பதிவு செய்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் மின்சாரம், எரிபொருள் என அனைத்து எனர்ஜி பற்றாக்குறையும் உருவாகியுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளை அதிகம் நம்பியிருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டிலும் இந்தப் பாதிப்பு அதிகமான காரணத்தால் மின்தடை மற்றும் மின்வெட்டுகளைத் தடுக்க எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications