பத்து ரூபாய்க்கு கீழ் பங்கு மதிப்பு கொண்ட ஒரு பென்னி ஸ்டாக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது. சில்ப் டெக்னாலஜிஸ் (Sylph Technologie) என்ற ஸ்மால் கேப் நிறுவனத்தின் பங்கு மதிப்பு டிசம்பர் 3ஆம் தேதி அன்று ஒரே நாளில் 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
கூடிய விரைவில் சில்ப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வாரிய இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்தில் கூடுதலாக நிதி திரட்டுவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் சில்ப் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பாக பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் தன் வசம் இருக்கும் ஈக்விட்டி பங்குகள் மற்றும் பிற பத்திரங்களை தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து நிதி திரட்டும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை என்று காலை 1.05 ரூபாய் என வர்த்தகத்தை தொடங்கிய சில்ப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5% உயர்ந்து 1.06 ரூபாய் என்ற அளவில் அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது.
சில்ப் டெக்னாலஜிஸ் என்பது ஒரு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மென்பொருள் மேம்பாட்டு சேவைகளை வழங்கி வருகிறது. அவுட்சோசிங் சாப்ட்வேர் டெவலப்மெண்ட், ப்ராடக்ட் டெவலப்மெண்ட், ஸ்ட்ராட்டஜி கன்சல்டிங் மற்றும் இ-காமர்ஸ் ஃபார் வெப் அண்ட் மொபைல் ஆகிய சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக ஏற்றத்திலேயே இருக்கிறது.
நவம்பர் மாதத்தில் 2 சதவீதமும் டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த மூன்று நாட்களில் மொத்தம் 8 சதவீதமும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த நிறுவன பங்கு மதிப்பின் 52 வார கால உச்ச பட்ச மதிப்பு 5.30 ரூபாய் ஆகும். பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி இந்த உச்சத்தை இந்த பங்கு மதிப்பு எட்டியது. இதன் பின்னர் பலரும் இந்த பங்கினை விற்பனை செய்ததால் அது தொடர்ந்து சரிவடைந்து அக்டோபர் 25ஆம் தேதி 52 வார கால குறைந்தபட்ச மதிப்பான 0.80 ரூபாய் என்ற அளவை எட்டியது.


Click it and Unblock the Notifications