இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட டெலிகாம் நிறுவனமான தடிரன் டெலிகாம் இந்தியாவில் ஐபி டெலிபோன்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.80 கோடியாகும். இது குறித்த தகவலை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு நிறுவனம் இந்தியாவிற்கு வந்தாலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவும்.
இந்த ஐபி டெலிபோன்களை பயன்படுத்தி கான்ஃபரன்ஸ் அழைப்புகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை செய்ய முடியும். மேலும் வணிக நிறுவனங்களில் இந்த போன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஐபி டெலிபோன்களை தயாரிப்பதற்காக தடிரன் டெலிகாம் டிசிஎம் ஸ்ரீராமுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

தடிரன் டெலிகாம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மோஷி மிட்ஸ் இந்தியாவில் தங்களுடைய உற்பத்தி திட்டத்தை அறிவிக்கும் நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டாம் கட்டத்தில் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும், அதற்காக கூடுதல் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் ஐபி ஃபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை பயன்படுத்த இருப்பதாகவும், செயல் திறனை பொறுத்து உற்பத்தி அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தடிரன் நிறுவனம் இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் வணிகத்தில் 70 சதவீதம் சாப்ட்வேர் மூலமாகவும். 30 சதவீதம் ஹார்டுவேர் மூலமாகவும் வருகிறது. இந்தியாவில் ஐபி ஃபோன்ககளின் உற்பத்தி திட்டத்தின் பேஸ் 1 தொடங்கப்பட்டுள்ளது. உற்பத்தி இலக்குகளை பொறுத்து இரண்டாம் கட்ட உற்பத்தியில் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட்டையும் தொடங்குவோம் என்று மிட்ஸ் கூறியுள்ளார். ஏற்கனவே சாப்ட்வேர் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டால் அப்போது அது தொடர்புடைய வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். இதனால் வேலை வாய்ப்பின்மை குறையும். டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைவரான ருத்ரா ஸ்ரீராம் கூறுகையில், "எங்கள் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. தடிரன் டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து ஐபி டெலிபோன்களை தயாரிப்பதற்காக நாங்கள் ஒரு குழுவை அமைத்து வருகிறோம். உற்பத்தியை தவிர சேமித்து வைப்பதற்கான கிடங்கு, தளவாடச் செலவுகள் உட்பட தடிரான் டெலிக்காமுக்கு தேவைப்படும் அனைத்து ஆதரவையும் ஸ்ரீராம் வழங்கும்", என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications