தைவான் : இந்தியர்களை ஈர்க்கும் வகையில் தைவான் நாட்டு அரசு இரண்டு புதிய விசாக்களை அறிமுகம் செய்துள்ளது . இதன்படி திறன் மிகுந்த இந்திய தொழில் நிபுணர்கள் தைவானுக்கு சென்று எளிதாக வேலை வாய்ப்பு பெற முடியும்.
தைவான் நாடு செமிகண்டக்டர் உள்ளிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற நாடு. இங்கே தொழில்நுட்பம் சார்ந்த ஆலைகள் அதிகம். ஆனால் அதற்கேற்ற எண்ணிக்கையில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் திறன் மிகு ஊழியர்கள் அங்கே கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் திறன் மிகு ஊழியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது தைவான் அரசு.

தைவான் அரசு, புத்தாண்டை முன்னிட்டு இந்தியர்களுக்கான 2 புதிய விசா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒரு திட்டம் தி எம்ப்ளாய்மெண்ட் சீக்கிங் விசா (Employment Seeking Visa ) என்றும் மற்றொரு திட்டம் எம்பிளாய்மென்ட் கோல்ட் கார்டு (Employment Gold Card) என்றும் அழைக்கப்படுகிறது.
எம்ப்ளாய்மெண்ட் சீக்கிங் விசாவை பொருத்தவரை இந்தியர்கள் தைவானில் எளிமையாக சென்று வேலை தேட முடியும். இந்தியாவில் ஐடி பிரிவில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் நபர்கள் இந்த விசாவை பெற்று கொண்டு தைவான் சென்று வேலை தேடலாம். ஏற்கனவே இந்த பிரிவில் வேலைக்கு செல்பவர்களும் இந்த விசா மூலம் அதிக சம்பளத்தில் தைவானில் வேலை தேடி கொள்ளலாம்.
தைவான் எம்ப்ளாய்மெண்ட் கோல்ட் கார்டு விசாவை பொறுத்தவரை அங்கே வேலைக்கான உரிமத்தையும் தங்குவதற்கான உரிமத்தையும் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்தியர்கள் தைவான் நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்தியர்கள் எளிதாக இந்த விசா பெற்று தைவானுக்கு வேலைக்கு செல்ல முடியும்.
அதற்காகவே இந்த விசாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது தைவான் நாட்டில் பல்வேறு துறைகளில் திறன்மிகு ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே தான் தைவான் அரசு இந்தியர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது.
எம்பிளாய்மெண்ட் கோல்டன் கார்டனை பொறுத்தவரை தொழில் நிபுணர்கள் அங்கே சென்ற வேலை வாய்ப்பு பெறுவதோடு மட்டுமில்லாமல் அங்கே எளிமையாக அவர்கள் குடியேற முடியும், சுயதொழில் தொடங்கவும் முடியும் . இந்த விசா 3 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும் என்றும் வேண்டுமென்றால் அதனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தைவான் அரசு தெரிவித்துள்ளது.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications