தைவான் நாட்டை சேர்ந்த ஃபுல் செயின் (FULL CHAIN) நிறுவனம் தமிழ்நாட்டில் தன்னுடைய செமி கண்டக்டர் ஆலையை நிறுவ இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஃபுல் செயின் நிறுவனம் தன்னுடைய சர்வதேச அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை திருச்சியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவி இருக்கிறது.
இது தவிர தங்களுடைய செமி கண்டக்டர் பிரிவுக்கான வடிவமைப்பு அலுவலகத்தையும் திருச்சி நகரில் இந்த நிறுவனம் அமைத்திருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஜபில் நிறுவனத்தை தொடர்ந்து தற்போது ஃபுல் செயின் நிறுவனமும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு முன் வந்திருப்பதை குறிப்பிட்டு இருக்கும் அமைச்சர் டிஆர்பி ராஜா தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் பொருளாதார ரீதியாகவும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் வளர்ச்சி அடைவதை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உறுதி செய்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

குறிப்பாக சென்னை தாண்டி மற்ற நகரங்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கக்கூடிய நிறுவனங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அலுவலகங்கள் அமைக்கப்படுகிறது என குறிப்பிட்டு இருக்கும் அமைச்சர் டிஆர்பி ராஜா, இரண்டாம் நிலை நகரமான திருச்சியில் ஃபுல் செயின் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் வேறு எந்த மாநிலத்திலும் இரண்டாம் நிலை நகரங்களிலும் இது போன்ற வளர்ச்சி உறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
செமி கண்டக்டர்கள் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியில் தமிழ்நாடு தன்னை வலுப்படுத்திக் கொண்டே வருகிறது என அமைச்சர் சுட்டிக் காட்டி இருக்கிறார். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட செமி கண்டக்டர் நிறுவனம்தான் ஃபுல் செயின். இந்த நிறுவனம் திருச்சியில் தன்னுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளதோடு மட்டுமில்லாமல் கூடிய விரைவில் தன்னுடைய செமி கண்டக்டர் உபகரண உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக அரசிடம் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த நிறுவனம் ஈடுபட்டு இருக்கிறது.
இந்த செமி கண்டக்டர் ஆலை சென்னை அல்லது திருச்சியில் அமைந்திருக்கும் அரசுக்கு சொந்தமான தொழில் பூங்காக்களில் அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது என்றால் பெரும்பாலும் இது சென்னையில் அமைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவன அலுவலகத்தில் கார்பன் வெளியீட்டை குறைத்து எப்படி செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்வது என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக ஃபுல் செயின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் .இந்தியாவில் தற்போது பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகின்றன . இந்த சூழலில் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்குவது வழங்குவதற்கான தேவை அதிகரித்துள்ளது என்பதால் ஃபுல் செயின் நிறுவனம் தன்னுடைய செமி கண்டக்டர் உபகரண உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்கிறது.
ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த யெஸ் நிறுவனம் கோயம்புத்தூரில் தன்னுடைய செமி கண்டக்டர் உபகரண ஆலையை நிறுவி முதல் செமி கண்டக்டர் உற்பத்தி உபகரணத்தை கோயம்புத்தூரில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications