உலகின் முக்கிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தைவான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார உறவுகள் எப்போதும் இல்லாத வரையில் வலுப்பெற்றுள்ளது.
தைவான் நாட்டின் பல துறையை சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி சங்கிலிகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றி வருவதாக தைவானின் முக்கிய வர்த்தக அமைப்பின் தலைவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போரின் காரணமா, அமெரிக்க நிறுவனங்களுக்கு உற்பத்தி பார்ட்னராக இருக்கும் பல தைவான் நிறுவனங்கள் தனது சப்ளை செயினை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றியுள்ளது. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களுக்கு முதலீடு செய்துள்ளது.
2018 முதல் 2023 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தைவானின் நேரடி அன்னிய முதலீடு (FDI) 665 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று தைவான் வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ஜேம்ஸ் ஹூவாங் தெரிவித்தார்.
2006 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் இந்தியாவில் தைவான் நாட்டின் நேரடி அன்னிய முதலீடு சுமார் 277 மில்லியன் டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்று ஜேம்ஸ் ஹூவாங் கூறினார்.
இதன் மூலம் தைவான் நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்கள் உற்பத்தி சங்கிலிகளை வெளியேற்றி இந்தியாவில் நிறுவி வருவது தெளிவாகிறது என்று ஆதாரங்கள் உடன் கூறினார்.
பெரும்பாலான நாடுகளைப் போலவே, இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையே அதிகாரப்பூர்வ உறவுகள் இல்லை. இருப்பினும், இந்தியா தனது உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், தைவான் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான வர்த்தக உறவு உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?



Click it and Unblock the Notifications