தைவான்: தைவான் நாட்டின் மிகப்பெரிய செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான TSMC, உலகின் முன்னணி நிறுவனமாகவும் உள்ளது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்நிறுவனத்தின் உற்பத்தி பாதித்து உள்ளது.
புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கதால் செமிகண்டக்டர் உற்பத்தி முடங்கிய நிலையில் இன்று உற்பத்தி பணிகளை TSMC துவங்கியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தைவானின் கிழக்கு கடற்கரையை புதன்கிழமை காலை இந்த நிலநடுக்கம் தாக்கியது. அத்துடன் நிலச்சரிவுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கம் காரணமாக தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம்(TSMC) லேசாக சேதம் அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் குறிப்பிட்ட சில உபகரணங்கள் சேதமடைந்து, அவற்றின் செயல்பாடுகள் பாதித்துள்ளது. இருப்பினும், தங்களது முக்கியமான உபகரணங்கள் சேதமடையாமல் இருப்பதாக அந்த நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.
தைவானில் உள்ள TSMC மற்றும் ASE டெக்னாலஜி ஹோல்டிங் நிறுவனங்கள், ஐபோன்கள் மற்றும் கார்கள் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான குறைக்கடத்தி எனப்படும் செமிகண்டக்டர் சிப்களை உற்பத்தி செய்கின்றன.
இந்த தொழிற்சாலைகள் சிறிய நடுக்கங்களுக்கு கூட உணர்திறன் கொண்டவை, ஏனெனில் அவை அனைத்தும் நேனோ மீட்டர் அளவில் தயாரிக்கப்படுவதால் ஒரு சிறிய அளவிலான அதிர்வு கூட சிப் களை வீணடிக்கலாம். தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து TSMC பங்குகள் 1.3% சரிந்தன மற்றும் UMC பங்கு 1% குறைந்துள்ளது.
இந்த துறையில் வல்லுனர்களான பும் கி சன் மற்றும் பிரையன் டான் குறிப்பிட்ட சில சிப்-கள் காற்று புகாத vacuum இல் 24/7 இருக்க வேண்டும். தைவானின் வடக்கு தொழில்துறை பகுதிகளில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டால், அது தற்போது உற்பத்தியில் உள்ள இந்த உயர்தர சிப் கள் சேதம் அல்லது கெட்டுப்போவதற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.
தைவான் இரண்டு டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்திற்கு அருகில் இருப்பதால் அடிக்கடி பூகம்பங்களை அனுபவிக்கிறது. இருப்பினும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றிற்குத் தேவையான 80% முதல் 90% வரை சிப்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.
ஒரு தீவில் அதிக அளவு செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தொழில்துறை மற்றும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் எச்சரித்து வருகின்றனர். தைவான் பூகம்பங்களைத் தவிர, இராணுவ மோதல் இடமாகவும் கருதப்படுகிறது.
தைவானை ஒரு கிளர்ச்சிப் பகுதியாகக் கருதும் சீன அரசாங்கத்தால் தைவானுக்கு ஏற்படும் ஆபத்தை அறிந்த அமெரிக்க அதிகாரிகள், TSMC போன்ற நிறுவனங்களை வெவ்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
உலகளாவிய சிப் விநியோக சங்கிலியில் தைவான் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் இந்த தீவு நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் பூகம்பங்களுக்கு எதிராக தங்கள் தொழிற்சாலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிலர் தங்கள் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கு சேதத்தை குறைக்க தானியங்கி அமைப்புகளை வைத்திருக்கிறார்கள். அவற்றின் பெரும்பாலான வசதிகள் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் இல்லை என்றாலும், பல நிறுவனங்கள் சில உற்பத்தி ஆலைகளை காலி செய்துள்ளன.


Click it and Unblock the Notifications