தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வரும் வேளையில், இந்த இலக்கை 2030க்குள் எட்ட வேண்டும் என்ற முக்கிய இலக்கும் கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் MSME, கல்வி, திறன்வாய்ந்த ஊழியர்கள் என பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்தும் சாதகமாக இருக்கும் வேளையில், 1 டிரில்லியன் டாலர் இலக்கை வேகமாக அடைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை முக்கியமானதாக விளங்குகிறது. இதை சாத்தியப்படுத்த பல துறையில் சிறந்து வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தனது உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது.

இதன் படி உலகின் மிகப்பெரிய பிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூ தயாரிக்கும் நிறுவனமான Pou Chen என்னும் தைவான் நிறுவனத்தின் துணை நிறுவனம் தமிழ்நாட்டில் மாபெரும் உற்பத்தி தளத்தை அமைக்க சுமார் 2,302 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளது.
நைக், அடிடாஸ், நியூ பேலன்ஸ் மற்றும் டிம்பர்லேண்ட் போன்ற உலகின் பிரபலமான முன்னணி காலணி பிராண்டுகளுக்கு முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனம் தான் இந்த நாட்டின் Pou Chen நிறுவனம். இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 272 மில்லியன் ஜோடி காலணிகளை தயாரித்து உலகளவிலான விற்பனைக்கு அனுப்பியுள்ளது.
காலணி உற்பத்திக்காக 2,302 கோடி கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்திற்கு Pou Chen நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று செய்தது. இக்கூட்டதித்ல் இந்தியாவில் செய்யவிருக்கும் பல முதலீடுகளில் இதுவே முதலாவதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று Pou Chen துணைத் தலைவர் ஜார்ஜ் லியு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனான வீடியோ கான்பிரென்ஸ்-ல் கூறினார்.

Pou Chen நிறுவனம் 2,302 கோடி ரூபாய் முதலீட்டை 12 ஆண்டுகளில் உளுந்தூர்பேட்டை சிப்காட் பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலைில் செய்ய உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. மேலும் தைவானின் பியர் ஹாங் ஃபூ குழுமம் தென் மாநிலத்தில் காலணிகளை தயாரிக்க 1000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் மொத்த காலணி ஏற்றுமதியில் சுமார் 45 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து ஜியோர்ஜியோ அர்மானி மற்றும் குச்சி போன்ற முன்னணி பிராண்டுகளின் காலணிகளும் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சப்ளையர்களான பாக்ஸ்கான், Salcomp மற்றும் பெகாட்ரான் போன்ற சர்வதேச உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு ஒரு முக்கிய மற்றும் விருப்பமான இடமாக உள்ளது. சீனா மற்றும் தைவானில் இருந்து தங்களது உற்பத்தி தளத்தை மாற்றவும், மேம்படுத்தவும் திட்டமிடும் அனைத்து நாடுகளுக்கும் தமிழ்நாடும், இந்தியாவும் முக்கிய இடமாக உள்ளது.


Click it and Unblock the Notifications