டெல்லி: இந்தியாவை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு பெருமளவில் சீனாவை நம்பி இருக்கின்றன. ஆனால் இந்தியா சீனா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி இறக்குமதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் இந்தியா சீனா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தங்களால் உதவி செய்ய முடியும் என தைவான் தெரிவித்துள்ளது. தைவான் நாட்டு அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Hsu Szu-Chien பிடிஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியா மற்றும் தைவான் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் போது உயர் தொழில்நுட்ப பிரிவுகளில் தைவான் நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த அவர், தைவான் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்குவதன் மூலம் உயர்தரமான தொழில்நுட்ப உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும் கூறியுள்ளார். தைவான் மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக உறவினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வளரும் இருநாட்டின் பொருளாதாரமும் வளரும் என கூறியுள்ளார்.
மேலும் பல்வேறு பொருட்களுக்கு இந்தியா சீனாவை சார்ந்திருக்க வேண்டிய சூழல் மாறும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியா சீனா இடையிலான வர்த்தக பற்றாக்குறையும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்திற்காக பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து திறன்களும் இந்தியாவில் இருக்கிறது எனக் கூறியிருக்கும் அவர் அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். செமி கண்டக்டர் மட்டுமில்லாமல் மற்ற அனைத்து வகையான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியிலும் தைவான் இந்தியாவிற்கு தேவையான உதவியை வழங்கும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது இளம் வயதில் இருப்பவரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இங்கே உற்பத்தி துறைக்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார். தைவான் நிறுவனங்களும் சீனாவில் இருக்கக்கூடிய தங்களுடைய உற்பத்தி நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றன . அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல்களே இதற்கு காரணம்.
எங்கள் நாட்டு தொழில்நுட்பத்தையும் உங்கள் நாட்டு உற்பத்தி திறனையும் ஒருங்கிணைத்தால் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் பெரிய இலக்கை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கு இரு நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். 2023 - 2024 ஆம் நிதியாண்டினை பொருத்தவரை இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தக பற்றாக்குறை என்பது 101.75 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.
தைவான் நாட்டை பொறுத்தவரை உலகில் பயன்படுத்தப்படும் 70% செமி கண்டக்டர்கள் அங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகளில் பயன்படுத்தக்கூடிய நவீன சிப்புகளில் 90 சதவீதம் தைவான் நாட்டில் தான் உற்பத்தியாகின்றன. இந்த நிலையில் தைவான் அரசு இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தி தங்களுடைய பொருட்களை இந்தியாவில் தயாரிக்க முன் வந்துள்ளது.
இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 17ஆவது பெரிய வர்த்தக கூட்டாளியாக தைவான் இருந்து வருகிறது. இந்தியாவில் தைவான் நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. காலணி உற்பத்தி, இயந்திரங்கள் தயாரிப்பு மற்றும் வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு தைவான் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருக்கின்றன.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications