இந்தியாவிலேயே வேகமாக வளரும் மாநிலங்களில் மிகவும் முக்கியமானதாக விளங்குவது தமிழ்நாடு, விஜய் தலைமையிலான அரசு முதலீட்டை ஈர்ப்பதில் தீவிரம் காட்டி வருவது மட்டும் அல்லாமல் புதிய முதலீட்டாளர்களுக்கு வேகமான ஒப்புதலை அளிக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தைவான் நாட்டில் இருந்து சுமார் 8 பேர் அடங்கிய குழு மாபெரும் முதலீட்டு திட்டத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டு உற்பத்தி துறை தற்போது பல துறையில் முன்னோடியாக இருக்கும் வேளையில் உலக நாடுகள், இந்தியாவில் தமிழ்நாட்டை மிகவும் முக்கியமான முதலீட்டு தளமாக பார்க்க துவங்கியுள்ளது.

சொல்லப்போனால் சீனாவுக்கு மாற்று இடமாக இந்தியா விளங்கினாலும், தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு படிக்கு மேல் விருப்பமான முதலீட்டு பகுதியாக விளங்குகிறது. இதற்கு முக்கியமான காரணம் படித்த இளைஞர்கள் அதிகம் கொண்ட மாநிலம் + வர்த்தகம் ஏற்றுமதிக்கு ஏதுவான சந்தையாக தமிழ்நாடு விளங்குகிறது.
இந்த நிலையில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தலைமையிலான தைவான் நிறுவனங்களை சேர்ந்த 8 பேர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் சுமார் 80000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு தொகையை எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் முதலீடு செய்யும் திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.
மேலும் இந்த முதலீட்டின் வாயிலாக சுமார் 40000 பேருக்கு நேரயாக வேலைவாய்ப்பு உருவாக்க முடியும், மேலும் இந்த புதிய முதலீட்டு வயிலாக இப்பகுதியில் இருந்து ஏற்றுமதி வர்த்தகமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துறைமுக விரிவாக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், இந்த முதலீடு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமையும்.
இந்த 8 பேர் கொண்ட குழு தூத்துக்குடி, திருநெல்வேலியில் தொழிற்சாலை அமைக்கவும், ஏற்றுமதி செய்யவும் ஏதுவான சூழ்நிலை உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். உதாரணமாக இப்பகுதியில் தொழிற்துறைக்கான கட்டமைப்பு எந்தளவுக்கு உள்ளது, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதா, சாலை இணைப்பு வசதி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், விமான போக்குவரத்து வசதிகள், மேலும் இப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகள் என அனைத்தையும் ஆய்வு செய்யும்.
இதோடு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடி சிப்காட் பகுதியை ஆய்வு செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications