கொச்சின்: கேரள மாநிலத்தின் கொச்சின் விமான நிலையத்திற்குள் டாடா குழுமம் அமைத்திருக்க கூடிய பிரம்மாண்டமான தங்கும் விடுதி வரும் 28ஆம் தேதி கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனால் திறக்கப்பட இருக்கிறது.
கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்குள் டாடா நிறுவனம் தாஜ் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் என்ற பெயரில் ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை கட்டமைத்துள்ளது. 28ஆம் தேதி இதனை கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் திறந்து வைக்க இருக்கிறார். விமான நிலைய வளாகத்திற்குள் அமைந்திருக்க கூடிய தாஜ் கொச்சின் சர்வதேச விமான நிலைய தங்கும் விடுதி பல்வேறு பிரிமியம் வசதிகள் கொண்ட கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடையின் கீழ் உலக தரத்திலான உள்கட்டமைப்பையும் இந்தியாவிற்கே உகந்த விருந்தோம்பலையும் ஒருங்கிணைத்து தாஜ் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான விருப்பமான தளமாக கேரளா மாறி வருகிறது என்றும் இதனை மேம்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதி மேற்கொண்டு பயணிகளை ஈர்க்கும் என்றும் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் கொச்சின் சர்வதேச விமான நிலையம் சார்பாக நவீன வசதிகள் கொண்ட பயணிகள் தங்கும் இடங்கள் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஏரோ லவுஞ்ச் என்ற பெயரில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் ஆடம்பரமான வசதிகள் கொண்ட 42 அறைகள் இருக்கின்றன.
குறைந்த கட்டணத்திலேயே பயணிகள் இங்கு சென்று தங்கிக் கொள்ள முடியும். அது தவிர ஸ்பா, ஜிம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தக்கூடிய அறைகள் என பல்வேறு வசதிகள் கொண்டதாக இந்த ஏரோ லவுஞ்ச் அமைந்திருக்கிறது.
தற்போது புதிதாக கட்டப்பட்டு இருக்கக்கூடிய தாஜ் கொச்சின் இன்டர்நேஷனல் தங்கும் விடுதி 111 பிரீமியம் அறைகளைக் கொண்டதாக இருக்கிறதாம். இதற்குள் பிரத்தியேகமான உணவகம் குறிப்பாக சர்வதேச உணவுகளும் கிடைக்கக் கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கிறது . இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கொச்சின் விமான நிலையத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச முனையத்தை விரிவாக்கம் செய்வது, விளையாட்டு மைதானங்களை அமைப்பது என பல்வேறு திட்டங்கள் கையில் இருப்பதாக கொச்சின் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications