இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரு ஆசை, தாஜ் ஹோட்டலில் ஒரு நாளாவது சென்று சாப்பிடவோ அல்லது தங்கவோ வேண்டும் என்பது தான். பலருக்கும் எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், பலருக்கு இது எட்டா கனியாகவே உள்ளது. அப்படி மக்கள் மத்தியில் உயர்ந்த இடத்தை கொண்ட இந்த தாஜ் ஹோட்டலில் சைபர் அட்டாக் நடந்துள்ளது
நவம்பர் மாத தொடக்கத்தில் டாடா குழுமத்திற்கு சொந்தமான தாஜ் ஹோட்டல் குழுமத்தில் நடந்த சைபர் தாக்குதல் மூலம் சுமார் 15 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என்று ஈடி தெரிவித்துள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலான தாஜ்-ல் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை முதல் டெக் சேவைகள் வரையில் உயர் தரத்தில் இருப்பது எப்போதும் உறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் Dnacookies என்ற பெயரில் அழைக்கப்படும் மர்ம நபர் தாஜ் ஹோட்டலில் திருடப்பட்ட தரவுகளை முழுமையாக திரும்ப பெற வேண்டுமாயின் 5,000 டாலர் தொகையை கோரியுள்ளது. தாஜ் ஹோட்டலில் கசிந்துள்ள தரவுகளில் வாடிக்கையாளர்களின் முகவரிகள், உறுப்பினர் ஐடிகள், மொபைல் எண்கள் மற்றும் பிற தனிப்பட்ட அடையாள தகவல்கள் (PII) ஆகியவை திருடப்பட்டு கசிந்துள்ளது.
தாஜ் குழுமத்தை நிர்வாகம் செய்யும் டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் (IHCL) இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் தரவுத் தொகுப்பை மர்ம நபர் ஒருவர் வைத்திருப்பதாகக் கூறுவது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
மேலும் தாஜ் ஹோட்டல் சைபர் அட்டாக் நடந்துள்ளதாக என்பதை தெரிவிக்கவில்லை, இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த சைபர் அட்டாக்கில் திருடப்பட்ட தரவுகளை மாற்றி மீண்டும் பகிரப்பட்டு இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BreachForums தளத்தில் செய்யப்பட்ட பதிவில் இந்த மர்ம நபர் தாஜ் ஹோட்டல்-ன் 2014-2020 காலகட்ட வாடிக்கையாளர் தரவுகள் தன்னிடம் இருப்பதாகவும், இதுவரை யாருக்கும் பகிரப்படவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் 1000 நபர்களின் தரவுகளின் சேம்பிள் டேட்டாவையும் உறுதிப்படுத்த பகிர்ந்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிகளவிலான சைபர் அட்டாக் நடந்துள்ளது, இது படிப்படியாக கொரோனா தொற்றுக்கு பின்பு குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.


Click it and Unblock the Notifications