இந்தியாவின் முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான தாஜ் ஹோட்டல்கள் ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி 1903-ஆம் ஆண்டில் பாம்பேயில் உள்ள தாஜ் ஹோட்டலின் முதல் பிரான்ச்சில் ஒரு நாள் கட்டணமாக 6 ரூபாய்க்கு ஆரம்பித்த இந்த நிறுவனம்.. தற்போது ரூ. 1 லட்சம் கோடியை தொட்ட முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது. ஓபராய் ஹோட்டல்கள் சுமார் ரூ.24,000 கோடி மதிப்புள்ள 2வது நிறுவனமாக உள்ளது.
ஹோட்டல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கோவிட் காலத்திற்குப் பிறகு ஹோட்டல் துறை மட்டுமின்றி இந்தியாவின் உள்ள விமானத்துறையும் வளர்ச்சியை கண்டுள்ளது. அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த ஜூன் மாதம் ரூ. 1 லட்சம் கோடியை தொட்ட முதல் விமான நிறுவனமாக மாறியது. இண்டிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 1.9 லட்சம் கோடியாக உள்ளது. இது வெகு விரைவில் இரட்டிப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"எங்களுக்கு இந்த சாதனையை அடைவது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்திய சுற்றுலாத் துறையின் உண்மையான வளர்ச்சி இன்னும் அடையப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய அரசாங்கம் ரயில்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால், இந்தியா உலகளாவிய முக்கிய சுற்றுலாத் தலமாக உருவாகும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மற்றும் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் GDP வளர்ச்சிக்கு இன்னும் அதிகமாக பங்களிக்கும்" என்று IHCL-இன் MD & CEO புனீத் சத்வால் தெரிவித்துள்ளார்.
தாஜ் ஹோட்டலின் தாய் நிறுவனமான IHCL கடந்த வாரம் ரூ.1 லட்சம் கோடியை எட்டிய நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் ஹோட்டல்களை அமைத்து வருகிறது. IHCL-இன் கீழ் தற்போது Taj, SeleQtions, Vivanta மற்றும் Gateway, ஆகிய நான்கு பிராண்டுகள் உள்ளன.
ஓபராய் ஹோட்டல்களின் தாய் நிறுவனமான EIH சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.24,000 கோடி.இந்தியாவின் ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன, ஆனால் வெளிநாட்டு சுற்றுலா இன்னும் முழுமையாக மீளவில்லை. தற்போது, பல விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் அதிக விமானங்களை இயக்க முடியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு, விமான நிறுவனங்கள் தங்கள் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications