தாஜ்மஹால் ஓனர் யாருப்பா.. முதல்ல வரி கட்டுங்க.. வரலாற்றில் முதல்முறையாக நோட்டீஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா தளமாக இருக்கும் தாஜ்மஹால்-க்கு சொத்து வரியும், தண்ணீர் வரியும் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது இந்திய மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிநபர் வீடுகள், தனியார் கட்டிடங்களுக்குச் சொத்து வரியும், தண்ணீர் வரியும் வசூலிப்பது வழக்கம் ஆனால் அரசுக்கு சொந்தமான பல நூற்றாண்டாக இந்தியாவின் அடையாளமாகவும், கட்டிட கலையின் உச்சமாக இருக்கும் தாஜ்மஹால் போன்ற தேசிய நினைவு சின்னங்களுக்கு இதுவரையில் சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்தியதும், கோரியதும் இல்லை.

இந்த நிலையில் தாஜ்மஹால்-க்கு சொத்து வரியும், தண்ணீர் வரியும் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அப்போ தாஜ்மஹால் ஓனர் யார்..?

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

வரலாற்றில் முதன் முறையாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா முன்சிபல் கார்ப்பரேஷன், மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் -க்குத் தண்ணீர் வரியாக 1.9 கோடி ரூபாயும், 1.5 லட்சம் ரூபாயும் சொத்து வரியாகச் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நினைவு சின்னம்

நினைவு சின்னம்


உலகளவில் இந்தியாவின் அடையாளமாகவும், காதலர்களின் நினைவு சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால்-க்கு 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரியும், தண்ணீர் வரியும் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்திய தொல்லியல் துறை

இந்திய தொல்லியல் துறை

இந்திய தொல்லியல் துறை இந்த நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு ஆக்ரா முன்சிபல் கார்ப்பரேஷன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரி செலுத்தப்படாவிட்டால் சொத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ராஜ் குமார் படேல்

ராஜ் குமார் படேல்

இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல் ஆக்ரா முன்சிபல் கார்ப்பரேஷனின் நோட்டீஸ் குறித்துச் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேசிய நினைவுச் சின்னங்களுக்குச் சொத்து வரி விதிக்கப்படாது. தண்ணீருக்கு வணிக ரீதியான பயன்பாடு இல்லாததால் நாங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

தவறாக வந்த நோட்டீஸ்

தவறாக வந்த நோட்டீஸ்

தாஜ்மஹால் சுற்றியுள்ள வளாகத்திற்குள் பசுமையாகச் சூழ்நிலையைப் பராமரிக்க மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தாஜ்மஹால் -க்கான தண்ணீர் வரி மற்றும் சொத்து வரி முதல் முறையாகப் பெறப்பட்டுள்ளது, இது தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் ராஜ் குமார் படேல் தெரிவித்தார்.

ஆக்ரா முன்சிபல் கமிஷனர்

ஆக்ரா முன்சிபல் கமிஷனர்

இதற்கிடையில் ஆக்ரா முன்சிபல் கமிஷனர் நிகில் டி ஃபண்டே கூறுகையில் தாஜ்மஹால் வரி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நோட்டீஸ் பற்றி எனக்குத் தகவல் தெரியாது. மாநிலம் தழுவிய புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வரிகள் கணக்கிடப்பட்டுப் புதிய நோட்டீஸ் வெளியிடப்படுகின்றன.

புவியியல் தகவல் அமைப்பு

புவியியல் தகவல் அமைப்பு

இதில் அரசு கட்டிடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட வளாகங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையின் அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப தொடர்ந்து தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிகில் டி ஃபண்டே

நிகில் டி ஃபண்டே

இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மூலம், அவர்களிடமிருந்து வரும் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் கொடுத்துள்ளார் ஆக்ரா முன்சிபல் கமிஷனர் நிகில் டி ஃபண்டே.

உத்தரப் பிரதேசம் மாநிலம்

உத்தரப் பிரதேசம் மாநிலம்

தற்போது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வரிகள் கணக்கிடப்பட்டுத் தனியார் அமைப்புகள் வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட கோளாறாகக் கூட இருக்கலாம்.

ஆங்கிலேயர் ஆட்சி

ஆங்கிலேயர் ஆட்சி

தாஜ்மஹால் 1920 இல் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட, நினைவுச் சின்னத்திற்கு வீடு அல்லது தண்ணீர் வரி விதிக்கப்படவில்லை என இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+