கைநிறைய சம்பளம் தரும் வேலைகள் எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஐஐஎம், ஐஐடிகளில் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்கலாம். இருப்பினும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் படிக்காமல் இதுபோன்ற வேலைகளைப் பெறுவது கடினம்
தான்.
Talent Decrypt இன் நிறுவனர் மற்றும் CEO ஆருஷி அகர்வால் அப்படிப்பட்ட ஒருவர். ஒருமுறை அவர் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்க ரூ.1 கோடி சம்பளம் தரும் வேலை வாய்ப்பை நிராகரித்தார். 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது ஆருஷி தனது தொழில்முனைவு பயணத்தை வெறும் 1 லட்சம் ரூபாயில் தொடங்கினார்.

டேலன்ட் டீகிரிப்ட் நிறுவனத்தை தனது நண்பர்கள் அஜய் குப்தா, அமித் பன்சால் ஆகியோருடன் சேர்ந்து தொடங்கினார். டேலன்ட் டீகிரிப்ட் நிறுவனம் சிறந்த டூல்களை உங்களுக்கு வழங்குகிறது. இது சிறந்த தொழில்நுட்ப திறமைகளை அடையாளம் காணவும், பணியமர்த்தல் முடிவுகளை மேற்கொள்ளும் திறன்களை வரைபடமாக்கவும் உதவுகிறது.
ஆருஷி ஜேபி இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.டெக் + எம்.டெக் (5 ஆண்டு ஒருங்கிணைந்த திட்டம்) பட்டம் பெற்றார்.
அவர் கல்லூரியின் போது தில்லி ஐஐடியில் 3 மாத இன்டர்ன்ஷிப்பும் செய்தார். 2021 ஆம் ஆண்டில், ஐஐஎம் பெங்களூரில் தனது நிர்வாகத் திட்டத்தை முடித்தார். கேம்பஸ் பிளேஸ்மென்ட் கிடைக்காதவர்களுக்கு உதவும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கி, டேலண்ட் டீக்ரிப்ட்டை தொடங்கினார். இவரது டேலன்ட் டீகிரிப்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது.
டேலன்ட் டீகிரிப்ட்டின் கீழ், வேலை தேடுபவர்கள் Hackathon மூலம் வெர்ச்சுவல் எபிலிட்டி சோதனையை மேற்கொள்கின்றனர். இதற்குப் பிறகு, அவர்கள் நேரடியாக வேலைக்கான நேர்காணலில் பங்கேற்கலாம்.

இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 10 லட்சம் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஆருஷி காசியாபாத் நேரு நகரில் வசிக்கிறார். இருப்பினும் அவர் மொராதாபாத்தைச் சேர்ந்தவர்.
28 வயதான ஆருஷி சிறந்த தொழில்முனைவோரோக விளங்குகிறார். அவர் தனது தாத்தாவை தனது குருவாகக் கருதுகிறார். ஆருஷியின் தந்தை அஜய் குப்தா ஒரு தொழிலதிபர். அவரது தாயார் இல்லத்தரசி ஆவார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications