ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியை கைப்பற்றி தாலிபான்கள் அந்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த பல முயற்சிகள் எடுத்தாலும் பெரிய அளவில் எதுவும் கைகொடுக்காத நிலையில், தொடர்ந்து பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது தாலிபான் அரசு. ஏற்கனவே கல்வி, பொது இடங்களில் தனியாக வருவது என பலவற்றை தடை செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தாலிபான் அரசு பூங்கா அல்லது புல்வெளி இருக்கும் ரெஸ்டாரென்ட்-க்கு பெண்கள் மற்றும் குடும்பங்கள் வருவதை தடை செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியான ஹெராத் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு தற்போதைய நிலையில் ஹெராத் மாகாணத்திற்ரு மட்டுமே பொருந்தும்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்கனவே பெண்கள் பூங்கா-விற்கு செல்ல கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கும் நிலையில் ரெஸ்டாரென்ட்-களில் பூங்கா அமைப்பில் இருக்கும் நிலையில் இதுவும் தவறு என பல மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் புகார் அளித்த நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக கூடுவதால் ஹெராத் மாகாண அரசு இப்புதிய தடை உத்தரவை விடுத்துள்ளது.

தாலிபான்கள் பல மாத போராட்டாத்திற்கு பின்பு ஆகஸ்ட் 2021ல் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அதிகப்படியான கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக 6ஆம் வகுப்புக்கு மேல் பெண்களுக்கு கல்வி அளிக்கப்படும், அதற்கு மேல் பள்ளி, கல்லூரிகளில் இடமில்லை. இதேபோல் அரசு மற்றும் ஐநா பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது மட்டும் அல்லாமல் அந்நாட்டில் பார்க், ஜிம் உட்பட ஆண்கள் பெண்கள் ஒன்றாக இணையும் சாத்தியக்கூறு உள்ள அனைத்து பொது இடங்களிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமாக பெண்கள் ஹிஜாப் அணியும் விதியை கடைப்பிடிப்பது இல்லை என்பதால் இந்த கட்டுப்பாடுகளை விதிப்பதாக தெரிவித்து வருகிறது தாலிபான்கள் அரசு.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications