ஆப்கானிஸ்தான் நாட்டை காப்பற்றிய தாலிபான்கள் பெண்கள் மீதான அடுக்குமுறையும், உரிமைகள் பறிக்கும் செயல்களுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். கல்வி மறுப்பில் துவங்கி பொது இடத்திற்கு தனியாக செல்லக்கூடாது, பொது நிகழ்ச்சியில் பேச கூடாது, பெண்களுக்கு மருத்துவ கல்வி பறிப்பு என்பது வரையில் பல கட்டுப்பாடுகளை விதித்து பெண்களின் சுதந்திரத்தை பறித்து வருகின்றனர்.
இதன் நீட்சியாக ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பால்க் மாகாணத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், இனி அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பெண்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்தக் கூடாது என தலிபான் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது அரசு ஆவணங்கள், மருத்துவ பதிவுகள், மருந்துச் சீட்டுகள் ஆகியவற்றில் பெண்கள் அவர்களின் பெயர்களுக்குப் பதிலாக பொதுவான சொற்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பால்க் மாகாண அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி பெண்களை Bibi என்ற பொதுவான பெயரில் அடையாளப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. Bibi என்பதன் உண்மையான பொருள் வயதான முதியவர் அல்லது பாட்டி என பொருள்படுகிறது.
பல இடத்தில் பெண்களுக்கு அவர்களின் பெயரை பயன்படுத்தாமல் ஆடு, பசு என்ற விலங்குகளாக குறிப்பிடுவதாக தெரிகிறது.
ஜெர்மனியை சேர்ந்த ஆப்கானிஸ்தான் பெண் உரிமை ஆர்வலரான லாலா உஸ்மானி ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பெண் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் பெறப்பட்ட தகவல்கள் மூலம் இதை உறுதி செய்துள்ளார்.
பால்க் மாகாணத்தின் தாலிபான் அரசு பெண்களின் உண்மையான பெயர்களை எழுதவும், உச்சரிக்கவும் தடை விதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய பொதுவான பெயர்களை கொண்டு அழைப்பதும், விலங்குகள் பெயரை கொண்டு அழைப்பதும் பெண்களின் உரிமையை பரிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஒரு பெண்ணின் பெயரை பறிப்பது, அவர்களை மனிதராக மதிக்க மறுக்கும் செயலாகும், தலிபான்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை பெரும் கோபத்துடன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார் லாலா உஸ்மானி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் பெண்களை அவர்களின் பெயர்களால் அழைக்காமல், அவர்கள் வீட்டு தலைவர் பெயரை உடன் மனைவி அல்லது மகள் என அழைப்பதும் வழக்கமாக கொண்டு உள்ளனர் என்பதையும் லாலா உஸ்மானி விளக்கினார். பெண்களின் கல்லறைகளிலும் அவர்களின் பெயர் எழுதவோ அல்லது பொறிக்கப்படுவதோ கிடையாது எனவும் தெரிவித்தார்.
2021-ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் இத்தகைய அறிவிப்புகளுக்கு எவ்விதமான மறுப்பும் தெரிவிக்க எந்தொரு அமைப்பும் இல்லை என்பது தான் பெரிய பிரிச்சனை.


Click it and Unblock the Notifications