பாகிஸ்தான், சீனா, இந்தியா, ஈரான், தஜிகிஸ்தான் உடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அந்நாட்டின் மக்களின் சுதந்திரம் அதிகளவில் பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் சீர்குலைந்தது.
இந்த நிலையில் தாலிபான் ஆட்சியில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை சுற்றுலா தலமாக மாற்றவும், அதிகளவிலான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், தாலிபான் நடத்தும் ஒரு இன்ஸ்டியூட்டில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை நிபுணர்களை உருவாக்குவதற்கான பயிற்சி வகுப்பில் 30 ஆண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் வயது, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் என அனைத்திலும் பெரிய அளவில் வேறுபடுகின்றன. இதில் ஆச்சரியப்படும் விதமாக, இந்த வகுப்பில் ஒரு மாடலும், வேலை அனுபவம் இல்லாத 17 வயது சிறுவனும் இடம் பெற்றுள்ளனர். இப்படிப் பல தரப்பினரைச் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் பயிற்சி அளிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வகுப்பில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். சுற்றுலா அல்லது விருந்தோம்பல் துறை பற்றி எந்த புரிதலும், அனுபவமும் இல்லாத இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் வேறு பக்கத்தை உலகிற்குக் காட்ட உள்ளனர். இந்த முயற்சிக்குத் தாலிபான் ஆட்சியும் ஆதரவளிக்கிறது.
துபாய் போன்ற முக்கிய நகரங்களுடன் ஆப்கானிஸ்தானுக்கு விமான சேவை அதிகரித்துள்ளது, இதனால் அசாதாரணமான இடத்திற்கு சுற்றுலா செல்வதைப் பெருமையாகக் கருதும் வெளிநாட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்குச் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்றாலும், ஆப்கானிஸ்தான் சுற்றுலாத் துறை வளர்ச்சியின் துவக்கப் புள்ளியாக உள்ளது. .
2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு 691 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு 7,000 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா செல்வதில் சில குறைபாடுகளும் உள்ளன. விசா பெறுவது கடினமாகவும் செலவு மிக்கதாகவும் உள்ளது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான உறவைத் துண்டித்துவிட்டன. ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் மூடப்பட்டிருந்தன அல்லது அவற்றின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications