சென்னையின் மிக முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக தாம்பரம் இருக்கிறது. பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகிய இரண்டும் ஒரே இடத்தில் அமைந்து இருப்பது மட்டுமில்லாமல் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கம் வந்து விட்டால் அங்கிருந்து சென்னை நகருக்குள் வருகை தருவதற்கு மிக முக்கியமான ஒரு மையமாக தாம்பரத்தை தான் பயன்படுத்துகிறார்கள். அதே போல ரயில்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு தாம்பரம் ரயில் நிலையமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை மக்களின் போக்குவரத்தில் முக்கியமான பகுதியாக தாம்பரம் இருக்கிறது. குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையம் வெளியூர் சென்று வரக்கூடிய பயணிகளுக்கும் சரி புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கும் சரி மிக முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தை பொருத்தவரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் மக்கள் பயணிகள் வருகைக்கு ஏற்பவும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஏற்பவும் ரயில் நிலையத்தில் நவீன வசதிகள் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில் தான் தாம்பரம் ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே மறுசீரமைப்பு செய்ய முடிவு எடுத்திருக்கிறது. கிட்டதட்ட 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாம்பரம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான திட்டங்களை தெற்கு ரயில்வே வகுத்திருக்கிறது. தெற்கு ரயில்வேயின் இந்த திட்டத்திற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சகமும் அனுமதி தந்திருக்கிறதாம்.
தற்போதுள்ள பயணிகளை விட இரண்டு மடங்கு பயணிகளை கையாளும் திறன் கொண்ட ஒரு ரயில் நிலையமாக மாற்றப்பட இருக்கிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கை 12 இலிருந்து 16 ஆக உயர்த்தப்பட உள்ளது இது தவிர கூடுதலாக மூன்று பிளாட்பார்ம்களும் சேர்க்கப்பட உள்ளன.

பயணிகள் சென்றுவர ஏதுவாக நவீன கட்டமைப்புகள் மேம்பாலங்கள் உள்ளிட்டவையும் கொண்டு வர தெற்கு ரயில்வே முடிவு செய்து இருக்கிறது. தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் பீக் அவர்களில் 13,500 பயணிகள் கையாளப்படுகின்றனர். இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 29 ஆயிரம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட ஒரு ரயில் நிலையமாக மாறி இருக்குமாம்.
ஏற்கனவே பயணிகள் நேரடியாகவே நுழைவாயில் இருந்து பிளாட்பார்ம்களை அணுகும் வகையிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தாம்பரம் ரயில் நிலையத்தை பொருத்தவரை போதிய அளவிலான இடம் இருப்பதால் தெற்கு ரயில்வே நவீன கட்டமைப்புகளை இங்கே கொண்டு வருவதற்கு முடிவு செய்து இருக்கிறது. எதிர்காலத்தில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் இந்த மறுசீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு ஆண்டுக்கு தாம்பரம் ரயில் நிலையம் 3.4 கோடி பயணிகளை கையாளுகிறது. ஆனால் அதற்கேற்ற வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில் அவற்றில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது. பயணிகள் எளிதாக வருவதற்கு ஏற்ற வகையிலான உள்கட்டமைப்புகள், சரக்குகளை கையாளும் திறன், வாகன நிறுத்துமிடங்கள், பயணிகள் காத்திருப்பதற்கான நவீன அறைகள் ஆகியவை திட்டமிடப்பட்டிருக்கின்றன.
தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டால் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பெரிய அளவில் நன்மையாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலான தென் மாவட்ட ரயில்கள் தற்போது எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வழியாக தான் செல்கின்றன. பெரும்பாலான மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் தான் இந்த ரயில்களில் ஏறுகிறார்கள். எனவே தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுவது தென்மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும். எதிர்காலத்தில் இங்கிருந்தே கூட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படலாம் என்பதால் தென் மாவட்ட மக்கள் ஊர்களுக்கு சென்று வர பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications