தமிழ் சினிமாவில் 2025ஆம் ஆண்டு பல்வேறு ஃபீல் குட் படங்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றன. நல்ல கதையாக இருந்தால் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தால் கூட மக்கள் அதற்கு வரவேற்பு தருவார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு படங்களும் வெளியாகி வசூலை கொடுத்திருக்கின்றன.
வசூலில் முதலிடம்: பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் இல்லை என்றாலும் கதையை மட்டுமே முதலீடாக கொண்டு வெளிவந்த படங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு தந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்த ஆறு மாத காலத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகின. இந்த திரைப்படங்களில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி: படத்தின் பட்ஜெட்டை விட பாக்ஸ் ஆஃபிஸில் அதிக வசூல் தந்த படம் எது என்ற பட்டியலில் பாலிவுட் திரைப்படங்களை எல்லாம் பின்னுக்கு தமிழ்நாட்டில் வெளியான ஒரு திரைப்படம் அதிக வசூல் குவித்த படமாக உருவெடுத்து இருக்கிறது. வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்து இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக லாபம் ஈட்டிய திரைப்படமாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் இருக்கிறது.
பட்ஜெட்டை விட 1200% லாபம்: அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தமிழில் வெளியானது . 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது வரை உலக அளவில் 90 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. அதாவது திரைப்படத்தின் பட்ஜெட்டை விட 1200 சதவீதம் அதிக லாபம் ஈட்டி தந்த படமாக இது மாறி இருக்கிறது.

எவ்வளவு வசூல்?: ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் தமிழக அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. முதல் வாரத்திலேயே இந்த திரைப்படம் 23 கோடி ரூபாயை வசூல் செய்தது, இரண்டாவது வாரத்தில் 29 கோடி ரூபாயாக இது அதிகரித்தது. மக்களின் வாய்வழி விளம்பரம் மூலமே இந்த திரைப்படம் பலரிடமும் சென்று சேர்ந்தது.
பாலிவுட் படம்: 5 வார காலம் தியேட்டர்களில் மட்டும் இந்த திரைப்படம் இந்தியாவில் 62 கோடி ரூபாயையும் சர்வதேச திரையரங்குகளில் 28 கோடி ரூபாயையும் வசூலாக வாரி குவித்து இருக்கிறது. அதே வேளையில் இந்தியாவில் இந்த ஆண்டு அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக சவ்வா திரைப்படம் விக்கி கவுசில் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது உலகம் முழுவதும் இது 808 கோடி வருமானத்தை ஈட்டியது .படம் தயாரித்த பட்ஜெட்டை விட 800 சதவீதம் லாபமீட்டி தந்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
டிராகன் படம்: அடுத்ததாக மலையாளத்தின் வெளியான மோகன்லாலின் துடரும் திரைப்படம் 720 சதவீதம் லாபம் தந்த படமாக இருக்கிறது. தமிழில் வெளியான டிராகன் திரைப்படம் பட்ஜெட்டை விட 300 சதவீதம் லாபம் தந்த திரைப்படமாக இருக்கிறது. சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,இளங்கோ குமரவேல் ,யோகலட்சுமி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி . இலங்கை தமிழர்கள் வாழ்வு தேடி தமிழகத்துக்கு வருவதை இங்கே அவர்களின் வாழ்வுக்கான போராட்டத்தையும் மனிதர்களின் நற்குணங்களையும் அடிப்படையாக கொண்ட படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications