முதலமைச்சர் விஜயை முந்திய பெண் எம்எல்ஏ..!! சட்டமன்றத்தின் அடையாளத்தையே மாற்றிய தவெக..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒட்டுமொத்த மாநிலத்தின் அரசியலையுமே புரட்டி போட்டு இருக்கிறது. கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தின் அடையாளமே மாறி இருக்கிறது. எதிர் எதிர் கட்சிகளாக இருந்த திமுகவும் அதிமுகவும் தற்போது எதிர்க்கட்சிகளாக ஒரே வரிசையில் அமர்ந்திருக்கின்றன. ஸ்டாலின் இல்லாத ஒரு சட்டமன்றம் , கோட் சூட் அணிந்து வரும் முதல்வர் என பல புதிய நிகழ்வுகளை எல்லாம் நாம் காண முடிகிறது.

முதலமைச்சர் விஜயை முந்திய பெண் எம்எல்ஏ..!! சட்டமன்றத்தின் அடையாளத்தையே மாற்றிய தவெக..!!

தற்போது தமிழ்நாட்டில் பொறுப்பேற்று இருக்கக்கூடிய 233 எம்எல்ஏக்களில் 193 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆகியவை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 233 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 83 சதவீதம் பேர் அதாவது 193 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். மொத்த எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி ஆகும்.

தமிழ்நாட்டு எம்எல்ஏக்களிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக அதிமுகவை சேர்ந்தவரும் மார்ட்டின் லாட்டரி விற்பனை நிறுவனத்தின் மனைவியுமான லீமாரோஸ் மார்ட்டின் முதல் இடத்தில் இருக்கிறார். லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பற்ற லீமாரோஸ் மார்ட்டின் சொத்து மதிப்பு 58,637 கோடி ரூபாய் ஆகும்.

முதலமைச்சர் விஜயை முந்திய பெண் எம்எல்ஏ..!! சட்டமன்றத்தின் அடையாளத்தையே மாற்றிய தவெக..!!

அடுத்ததாக தமிழ்நாட்டிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட இரண்டாவது எம்எல்ஏ என்ற பெருமை விஜய்க்கு கிடைத்திருக்கிறது. பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் முதலமைச்சராகவும் செயல்படக்கூடிய விஜய்க்கு 648 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருக்கிறது. அடுத்ததாக மார்ட்டின் குடும்பத்தின் மருமகனான ஆதவ் அர்ஜுனா 534 கோடி சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Also Read

தமிழ்நாட்டு எம்எல்ஏக்களிலேயே குறைந்த சொத்து மதிப்பு கொண்டவராக ஆம்பூர் தொகுதி தவெக எம்எல்ஏவான தாஹிரா இருக்கிறார். அவருக்கு நான்கு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக தான் சொத்து மதிப்பு இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். அதேபோல மயிலம் தொகுதி தவெக எம்எல்ஏ சிவக்குமார் 5 லட்சத்திற்கும் குறைவான சொத்து மதிப்போடு திகழ்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவான மாரிமுத்து 13 லட்சத்திற்கும் குறைவான சொத்து மதிப்பு கொண்டவராக திகழ்கிறார்.

அதேபோல புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் 126 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. 56 எம்எல்ஏக்கள் மீது கொலை , கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒரு எம்எல்ஏ மீது கொலை வழக்கும் , ஆறு எம்எல்ஏக்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் இருக்கின்றன. அதிகபட்சமாக தவெக எம்எல்ஏக்கள் 107 பேரில் 41 பேர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரில் மூன்று பேர் மீதும், திமுக எம்எல்ஏக்கள் 59 பேரில் 37 பேர் மீதும் ,அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேரில் 33 பேர் மீதும் , பாமக எம்எல்ஏக்கள் நான்கு பேரில் 4 பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.

Recommended For You

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மிக இளம் வயது எம்எல்ஏவாக தவெகவை சேர்ந்த பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐயங்கரன் மற்றும் அவிநாசி எம்எல்ஏ கமலி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களுக்கு 28 வயது ஆகிறது. மிக மூத்த உறுப்பினராக பாஜக எம்எல்ஏவான உதகை சேர்ந்த எம்எல்ஏ போஜராஜன் இருக்கிறார் அவருக்கு வயது 79 வயதாகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் 23 பெண்கள் இருக்கின்றனர். 233 எம்.எல்.ஏக்களில் 49 பேர் 25 முதல் 40 வயது உட்பட்டவர்களாகவும் 123 பேர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். 61 சட்டமன்ற உறுப்பினர்கள் 61 முதல் 80 வயது உட்பட்டவர்கள் என தெரியவந்திருக்கிறது. கல்வி என பார்க்கும்போது தேர்தல் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 85 பேர் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், 139 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், 9 பேர் டிப்ளமோ முடித்தவர்கள் என தெரிய வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+