தமிழ்நாட்டை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பதில் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் வேளையில், மாநிலம் முழுவதும் புதிய முதலீடுகளை ஈர்த்து, புது தொழிற்சாலைகளை அமைத்து அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மாநிலத்தில் 15க்கும் அதிகமான இடத்தில் புதிய சிப்காட் பூங்கா அமைத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் 2024ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை ஒரு சின்ன பிளாஷ்பேக் ஆக பார்ப்போம் வாங்க.

தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டை ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு உடன் துவங்கியது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு 6.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு விருப்பங்களை பெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் 26 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு முழுவதும் பல நிறுவனங்கள் முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு மிகவும் சிறப்பான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மாநிலத்தின் தொழில்துறையில் முதலீடுகளை குவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங், காலணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் குவிந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் செயல்பாடுகளைத் தொடங்கியதோ அல்லது பெரிய அளவிலான முதலீடுகளை அறிவித்த நிறுவனங்களின் பட்டியல் மிகவும் நீளமானது, வாங்க மொத்தமாக ஒரு லிஸ்ட்டை பார்ப்போம்.
வின்பஸ்ட், டாடா பவர், டிட்டாகர் ரயில், ராயல் என்ஃபீல்ட் (எலக்ட்ரிக் வாகனங்களுக்கா), செயிண்ட் கோபைன், பெஸ்டோ, மிட்சுபிஷி எலக்ட்ரிக், ஃபர்ஸ்ட் சோலார், ZF, ஸ்டெலான்டிஸ், ஹூண்டாய், பெகாட்ட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், செம்ப்கார்ப், கார்னிங், கூகுள், ராக்வெல், டிக்ஸன்-எச்பி, சன்னிமா-ரிலையன்ஸ், ஃபாக்ஸ்கான், பேட்ரர், விக்ரம் சோலார், நோக்கியா, மோதர்சன்-பீல், பிரேக்ஸ் இந்தியா-ஏடிவிசிஸ், யமஹா மோட்டார்ஸ், போர்டு மோட்டார்ஸ், ஓஹ்மியம், விஸ்டியன், ஈல்டு இன்ஜினியரிங், கேட்டர்பில்லர், டிரில்லியண்ட், ஜேபிஐஎல் எலக்ட்ரானிக்ஸ், கோனே எலவட்டர்கள், ஹூண்டாய் கெஃபிக்கோ, போன்ஃபிகியோலி, அல்லிசன் டிரான்ஸ்மிஷன், ஃபாக்ஸ்கான் (டிஸ்ப்ளேக்களுக்காக), கைனஸ், ஃப்ரீட்ரெண்ட், ஸ்விங் ஸ்டெட்டர் போன்ற பல உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீட்டை செய்தது.
இந்த முதலீடுகள் சென்னையில் மட்டும் அல்லாமல் ஓசூர், திருச்சி, தூத்துக்குடி-திருநெல்வேலி, கோவை, திண்டிவனம், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த முதலீடுகள் குவிந்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியின் எதிர்காலம் சிறப்பாகத் தெரிகிறது, பல முக்கியமான திட்டங்கள் 2025 ஆம் ஆண்டிலும் எதிர்நோக்கப்படுகிறது.
ஃபாக்ஸ்கானின் பேட்டரி சேமிப்பு தொழிற்சாலை மற்றும் ஐகியா, SAAB, கேம்ஃபில் போன்ற ஸ்வீடிஷ் நிறுவனங்களின் அதிகரித்து வரும் முதலீட்டு ஆர்வம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications