கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்.. விவசாயிகளுக்கு நன்மை..!

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையின் கீழ் தமிழக அரசு இன்று விவசாய துறைக்கான தனி பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

இத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் துறை வளர்ச்சிக்காகப் புதிதாக 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தை' அறிவித்துள்ளார்.

கிராமங்கள் தேர்வு

கிராமங்கள் தேர்வு

இந்த திட்டத்தின் கீழ் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு இத்துறை சார்ந்த அனைத்து திட்டங்களும் ஓரே இடத்தில் பெறவும். இதன் மூலம் அனைத்து தரப்பு சேவைகளையும் விவசாயிகள் ஓரே இடத்தில் பெற்று நன்மை அடைய முடியும்.

துறை திட்டங்கள் ஒருங்கிணைப்பு

துறை திட்டங்கள் ஒருங்கிணைப்பு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தின் கீழ்.

வேளாண் துறை
தோட்டக்கலைத் துறை
வேளாண் பொறியியல் துறை
வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை
வருவாய் மற்றும் பேரிடர் துறை
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
பால் வள துறை
கால் நடை பராமரிப்புத் துறை
மீன் வள துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
நீர்வள ஆதார துறை
எரி சக்தி துறை

ஆகிய அனைத்து துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

இந்த திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல இருக்கும் மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். மேலும் கலைஞரின் இந்த அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி அடைந்து, தன்னிறைவு அடையும்.

விவசாயிகளுக்கு நன்மை

விவசாயிகளுக்கு நன்மை

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பியர் விளைச்சல் துவங்குவதிலிருந்து விற்பனை சந்தைக்குக் கொண்டு செல்லும் வரையில் அனைத்து சேவைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும் என்பதே சிறப்பு.

 நீர் சேமிப்பு அளவீடு உயர்த்த திட்டம்

நீர் சேமிப்பு அளவீடு உயர்த்த திட்டம்

தமிழ்நாட்டில் நீர் சேமிப்பு அளவீட்டை மேம்படுத்தவும், விவசாயத்திற்கு வருடம் முழுவதும் போதுமான தண்ணீர் விநியோகம் செய்வதற்கும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு நேற்றைய பொது பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

1,000 தடுப்பணைகள், கதவணைகள்

1,000 தடுப்பணைகள், கதவணைகள்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 10 வருடத்தில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.

 

குளங்கள்

குளங்கள்

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 50 குறு நீர்ப்பாசன குளங்களைத் தரப்படுத்தச் சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு, இதற்கான பணிகளை விரைவில் துவங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

அணை நீர் சேமிப்பு அளவு

அணை நீர் சேமிப்பு அளவு

தமிழ்நாட்டின் நீர் தேவை அளவீட்டைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்த்தேக்க அளவு பழைய நிலைக்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

நதிநீர் பேச்சுவார்த்தை

நதிநீர் பேச்சுவார்த்தை

இதன் மூலம் தமிழ்நாட்டில் நீர் சேமிப்பு அளவு படிப்படியாக அதிகரிக்கும் இதனால் விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் திட்டத்தைச் செயல்படுத்தக் கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக பொது பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+