தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட்டினை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த பட்ஜெட்டினை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பட்ஜெட் அறிக்கையில் அனைத்து துறைகளுக்குமான வரவு செலவு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
வழக்கமான பட்ஜெட்
இதற்கிடையில் நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தலின்போது வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என திமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன?
இந்த வேளாண் பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாரம்பரிய முறைப்படி இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பழங்கால விவசாய முறைகள் ஊக்குவிக்கப்படலாம்
மேலும் பாரம்பரிய விதைகள் மற்றும் பழங்கால விவசாய முறைகளை ஊக்குவிக்கும் விதமாக மானியங்கள் வழங்கப்படலாம். இயற்கை உரங்கள் ஊக்குவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு
விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்கள், விவசாயக் கடன், பயிர்கடன், என பலவற்றினை பற்றிய முக்கிய அறிவிப்புகளும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவி வருகின்றது. இது உற்பத்தியினை பெருக்கவும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications