சென்னை:தமிழ்நாடு சட்ட சபையில் இன்று விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில்,கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திறகு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகள் ஹேப்பி
இது மேற்கொண்டு கரும்பு சாகுபடியை அதிகரிக்க வழிவகுக்கலாம்.உற்பத்தியினை அதிகரிக்க வழிவகுக்கலாம். கரும்பு விவசாயிகளையும் ஊக்குவிக்கும் விதமாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கலாம்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம்
விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். அத்தகைய விவசாயத்திற்கு தமிழக பட்ஜெட்டில் தனியாக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இன்றைய பட்ஜெட் அறிக்கையில் பலரின் கவனத்தையும் ஈர்த்த மற்றொரு அறிவிப்பு வெளிநாட்டு வேளாண் தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு, அதனை மாநிலங்களில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற 3 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாடு, ஆடு, தேனி வளர்ப்புக்கு ஊக்கம்
மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மேலும் நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள வட்டியில்லா கடன் உதவி வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
சிறு குறு விவசாயிகளுக்கு மானியம்
கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி 2.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
முருங்கை ஏற்றுமதி
தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications