சென்னை: தமிழ் நாடு சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனிடையே இன்று வேளாண் பட்ஜெட்டினை வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வரும் நிலையில், வேளாண் பட்டதாரிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பட்டதாரிகளுக்கு எவ்வளவு மானியம்
இது விவசாயத் துறையை மேம்படுத்துவதோடு, வளர்ச்சியினையும் மேம்படுத்தும். 2021 - 22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பட்டதாரிகள் மூல அக்ரி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு ஊக்கம்
வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ 4 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 200 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. இது மட்டும் அல்ல இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
சிறு தானிய உற்பத்தி
இது விவசாயத்துறைக்கு பக்கபலமாக அமையலாம். குறிப்பாக சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் சிறு தானியங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சரிந்து வரும் சிறு தானிய உற்பத்தியினையை மீட்டெடுக்க உதவும் எனலாம்.
புதிய சிறு தானிய மண்டலங்கள்
இது தவிர நெல்லுக்கு பிறகு மாற்று பயிர் சாகுபடி முறைக்கு 24 கோடி நிதி உதவி,
கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும்.
சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications