இந்தியாவின் வளர்ச்சி தமிழ்நாட்டின் கையில் தான் உள்ளது.. நெத்தியடி.. சொன்னது இவரா..?!

சென்னை: மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பல வருடங்களாக மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடும், தமிழ்நாட்டின் மூலம் பெரும் ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசு கொடுக்கும் பங்கீடு குறித்தும், மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்துத் தான் இந்தியாவின் வளர்ச்சியே உள்ளது என ஐஎம்எப் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டுமெனில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மூன்று தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வளர வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் செய்கிற்குழு உறுப்பினரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி தமிழ்நாட்டின் கையில் தான் உள்ளது.. நெத்தியடி.. சொன்னது இவரா..?!


இதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகத்திற்கு இணையாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் தான் இந்தியாவின் வளர்ச்சியும் வேகமெடுக்கும் என்பது சுப்ரமணியன் அவர்களின் பேச்சு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

சென்னை CII அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன், "ஜப்பான் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டில் 215 பில்லியன் டாலரிலிருந்து 1995-ஆம் ஆண்டில் 5.1 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. இது 25 மடங்கு வளர்ச்சியாகும். அதேபோல், இந்தியாவும் தனது வளர்ச்சி விகிதத்தை தற்போதைய 7 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக அதிகரித்தால் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும்" என்றார்.

ஒரு நாடு கீழ் மட்டத்தில் இருந்து, நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் போது அதன் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிடும், இந்த நிலையைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருப்பதாகவும், இதற்கு உற்பத்தித் துறையை வளர்ப்பது முக்கியம் என்றும் கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன் கூறினார்.

"ஒரு கூட்டாட்சி அமைப்பில் அதிகாரம் இருக்கும். ஆனால் அதிகாரம் மற்றும் பொறுப்பு என்பது இரண்டு வெவ்வேறு பக்கங்கள். அதிகாரம் பற்றி மட்டுமே பேசி பொறுப்பை ஏற்காமல் இருக்க முடியாது. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் டிராப் பிரச்சனையைத் தவிர்க்க உற்பத்தித் துறை வளர்ச்சி மிகவும் முக்கியம். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்க வேண்டும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன், மாநில அரசுகள் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு அதிக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார். நிலங்களை ஒதுக்குதல் மற்றும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அனுமதிகளை விரைவாக வழங்குவது போன்றவை மிகவும் முக்கியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+