தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களையும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் நடக்கிறது. மேலும் இந்த சட்டமன்ற தேர்தல் அடுத்தடுத்த இந்திய அரசியல் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவன் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் Gyanesh Kumar, 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதிகள் குறித்து முழு அறிவிப்பை வெளியிட்டார்.

17.4 கோடி வாக்காளர்கள்
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இந்த மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் உறுதியாக பதிவாக வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
2.18 லட்சம் வாக்குச் சாவடிகள்
இந்த ஐந்து மாநிலங்களிலும் மொத்தமாக 2.18 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. சராசரியாக 700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் மட்டும் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல 5 மாநிலத்திலும் வாக்குசாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வசதியாக வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
இந்த தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்காக சுமார் 8.5 லட்சம் பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை வாக்கு சதவீதம் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு நடைபெறும் தேதி
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முடிவுகள் எப்போது?
இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் அட்டவணை
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள் ஏப்ரல் 9 வரை திரும்ப பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புடன், ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications