ஆட்டோ ஏறினாலே 50 ரூபாய்.. தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு..!!

தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசே வெளியிட்டுள்ளது. முன்பிருந்ததை விட இரண்டு மடங்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டில் அரசு சார்பாக ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல், 1.8 கி.மீ., துாரத்துக்கு குறைந்தபட்சமாக 25 ரூபாயும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 12 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் பெட்ரோல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, வாகன பராமரிப்பு செலவு, உதிரிபாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆட்டோ ஏறினாலே 50 ரூபாய்.. தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு..!!

இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, 13 ஆண்டுகளுக்கு பின், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை, மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் 1.8 கி.மீ., துாரத்துக்கு குறைந்தபட்சமாக 50 ரூபாய், கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இனி ஆட்டோவில் ஏறினாலே குறைந்தது 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதே போல 4 கிலோமீட்டர் சென்றாலே 100 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு சென்றாலே 250 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Also Read

புதிய கட்டண விதிகளின்படி, இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை, வழக்கமான கட்டணத்தைவிட, 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு 1 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் 60 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கூடுதலாக 30 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

ஏற்கனவே ஆட்டோவில் அதிக கட்டணம் கேட்கின்றனர் என்ற புகார் இருக்கிறது இதில் அரசே கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. சாமானிய மக்கள் குறிப்பாக வயதானவர்கள் மாற்று திறனாளிகள் அதிகமாக ஆட்டோக்களையே நம்பியுள்ளனர். அவர்களுக்கு இந்த கட்டண உயர்வு சற்றே அதிர்ச்சியை தந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் வெற்றி பயண திட்டம் மூலம் பெரும்பாலான அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க வசதி வந்துள்ளது. இதனால் ஆட்டோ சவாரி குறைந்துவிட்டதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனைப்படும் நிலையில் , இந்த கட்டண உயர்வு அவர்களை எப்படி பாதிக்கும் என்பதை இனி வரும் நாட்களில் தான் பார்க்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+