தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளும் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களும் வங்கி விடுமுறை நாட்களாகும், ஆர்பிஐ விடுமுறை அட்டவனைப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மூன்று நாட்களும் வங்கிகள் மூடப்படும்.
தமிழ்நாடு அரசு 6 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வங்கிகள் 17ஆம் தேதி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வங்கி தொடர்பான பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த விடுமுறை நாட்களில் வங்கி சேவைகள் கிடைக்காது என்பதால், மக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கி விடுமுறை நாட்களில் அவசரத் தேவைகளுக்கு ஏடிஎம், நெட் வங்கிங், மொபைல் வங்கி போன்ற வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில்பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் ஆகிய முக்கிய விடுமுறைகள் இந்த நாட்களில் கொண்டாடப்படுவதால், வங்கி செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படும்.
இந்த மூன்று நாட்களிலும் வங்கி கிளைகள், தலைமை அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும். இதனால், அவசரத் தேவைக்கான பணம், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட பணியினை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து கொள்ள வேண்டும்.
இருப்பினும், இந்த விடுமுறை நாட்களில் ஏடிஎம் (ATM) சேவைகள் பெரும்பாலும் தொடர்ந்து செயல்படும். ஆனால், பணம் தீர்ந்து போகும் வாய்ப்பு இருப்பதால், முன்கூட்டியே பணம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. தமிழ்நாட்டில் அனைத்து இடத்திலும் டிஜிட்டல் பேமெண்ட் முறை வந்தாலும், மக்கள் பொங்கல் பண்டிக்கைகாக பெரு நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊருக்கும், கிராமத்திற்கும் வரும் காரணத்தால் ரொக்க பண தேவை அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவது சிறந்த யோசனையாக இருக்கும்.
இதேபோல், நெட் பேங்கிங் (Net Banking) மற்றும் மொபைல் வங்கி சேவைகள் இந்த விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து செயல்படும். எனவே, அவசரத் தேவைகளுக்கு இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விடுமுறை நாட்கலில் வங்கி வாடிக்கையாளர் ஆதரவு சேவைகள் (Customer Support) 24 மணிநேரமும் இயங்கும். வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளில் இதற்கான தொடர்பு எண் இருக்கும்.
வங்கி விடுமுறை நாட்களில் சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்கள் தங்கள் பணியினை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவது அவசியம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications