இந்த மாதத் தொடக்கத்தில் பிரிட்டிஷ்- ஸ்வீடிஷ் பார்மாசூட்டிகல் பெரு நிறுவனமான ஆஸ்ட்ரா ஜெனேகா சென்னையில் குளோபல் கேபபிலிட்டி சென்டரை தொடங்குவதாக அறிவித்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சென்டராக இது அமையும், இதன் மூலம் இந்தியாவில் தமிழ்நாடு குளோபல் கேபபிலிட்டி சென்டரின் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது.
இந்த சென்டர் மூலம் உலகளாவிய நிறுவனங்களின் மூலம் 50,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும். தமிழ்நாடு உலக பார்மா கம்பெனிகளான பைஸர், ரோச்சி, ஆஸ்ட்ரா ஜெனேகா ஆகியவை ஜிசிசியை தொடங்கும் மாநிலமாக மாறி உள்ளது.

இந்த சாதனை நமது அரசின் இலக்கான பெரிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். சென்னையில் உள்ள அலுவலக பணியிட இருப்பினால் ஜிசிசி மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
2023இல் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1 கோடி சதுர அடி அலுவலக பகுதி சென்னையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. பெங்களூரு, டெல்லி தலைநகர் பகுதியை மும்பையுடன் ஒப்பிட்டால் சென்னையில் இட வாடகை மிகவும் குறைவு.
நாட்டிலேயே மிக மலிவான அளவில் திறன் அளிப்பை தமிழ்நாடு தந்துள்ளது என்று முதலீட்டாளர்களுக்கு வசதி செய்து தரும் கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாக இயக்குநர் வி விஷ்ணு கூறியுள்ளார். இதில் கோயம்புத்தூர் டாப் டயர் 2 நகரமாக விளங்குகிறது. அதிக இன்ஜினியரிங் பட்டதாரிகள், நல்ல வாழ்க்கைத்தரம், தொழில் செய்ய ஏதுவான சூழல், சிறந்த நிர்வாகம் ஆகியவை இங்கிருக்கிறது.
லாஜிஸ்டிக்ஸ் ஜிசிசிக்களை வரவேற்பதில் கவனம் செலுத்துகிறோம். சென்னையில் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் தங்களது ஜிசிசிகளை அமைத்துள்ளன. இப்போது பார்மா நிறுவனங்கள் தங்களது ஜிசிசிகளை அதிகளவு அமைப்பதைப் பார்க்க முடிகிறது. இதனால் தமிழ்நாடு நல்ல முதலீட்டு கேந்திரமாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டை உலகின் திறன் தலைநகராக உருவாக்க முடியும் என்று அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தனது ஆர் அண்டு டி கொள்கையை 2022இல் வெளியிட்டது. இதன் மூலம் அலுவலகங்களுக்கு அதிக மானியம் தரப்படும். ஒரு ஆலைக்கு 25 கோடி ரூபாய் வரையும், பயிற்சிக்காக ஒரு ஊழியருக்கு ரூ.1.25 லட்சமும் மானியமாகத் தரப்படும். அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் புதிய ஜிசிசிகளில் சம்பளத்துக்கான மானியம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நமது மாணவர்கள் திறன் மேம்பாடு பயிற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தங்களது வீட்டுக்கு அருகிலேயே நல்லதொரு வேலைவாய்ப்பை அவர்களுக்கு உருவாக்கித் தரவும் முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications