இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி தளத்தை அமைப்பதற்காக திட்டமிட்டு வரும் வேளையில் சர்வதேச எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தை அடைய இலக்கை கொண்டு உள்ளது. இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களும் தனக்கான ஒரு பங்கீட்டை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஏற்கனவே முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு அமைதியாகவே இருக்கும். தமிழ்நாடு அரசு எற்கனவே EV policy-ஐ அறிமுகம் செய்து பல உற்பத்தி மட்டும் அல்லாமல் இன்னோவேஷன், ஏற்றுமதி, உள்நாட்டு டிமாண்ட்-ஐ அதிகரிக்கும் வகையில் 360 கோணத்திலும் கொள்கையை உருவாக்கியது.

தமிழ்நாட்டின் EV policy அறிமுகம் செய்யப்பட்ட பின்பு பல முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன துறையில் முதலீடு செய்தும், முதலீடு செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முக்கியமாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையை தலைகீழாக மாற்ற திட்டமிட்டு இருக்கும் பாக்ஸ்கான் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தளத்தை அமைக்க தீவிரமாக உள்ளது.
பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ஏற்கனவே மிகப்பெரிய ஐபோன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு கட்டமைப்பை கொண்டு உள்ளது. இதோடு தமிழ்நாடு அரசுடன் நீண்ட கால நட்புறவை பாக்ஸ்கான் கொண்டு உள்ளது.
எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை அமைப்பது குறித்து பாக்ஸ்கான் சேர்மன் யங் லியு உறுதி செய்த நிலையில், பாக்ஸ்கான்-க்கு இந்திய பிரதிநிதியாக செயல்படும் வி லீ பேசுகையில் தற்போது அமெரிக்காவில் OHIO-வில் தொழிற்சாலை அமைப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தது தாய்லாந்து நாட்டிலும், இதை தொடர்ந்து கட்டாயம் இந்தியாவில் தொழில்சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வி லீ பேசுகையில் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்காக தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதனால் பாக்ஸ்கான் அடுத்த 5 வருடத்தில் மாபெரும் செமிகண்டக்டர் தொழிற்சாலை மற்றும் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் 2024ல் நடக்க உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசும் மற்றும் பாக்ஸ்கான்-ம் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது ஹூண்டாய், அசோக் லைலாண்ட், டிவிஎஸ் ஆகியவை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெரும் பகுதி முதலீடு EV துறைக்குள் செல்ல உள்ளது. இதில் ஹூண்டாய் மோட்டார்ஸ் ஏற்கனவே 20000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதை தாண்டி 2 சக்கர வாகன தயாரிப்பில் ஓலா, Simple Energy, Ather Energy, Ampere Electric ஆகியவையும் முதலீடு செய்ய உள்ளது.
இதனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அடுத்த 15 முதல் 20 வருடத்திற்கு வேலைவாய்ப்பு குவிந்துக்கிடக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications