தமிழ்நாட்டில் இந்த 4 ஏரியாவுக்கு ஜாக்பாட்.. டெக் ஊழியர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு கொண்ட்டாடம்..!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் டி.எம். அன்பரசன், தமிழ்நாட்டில் தொழில்முனைவோர் சூழலை வலுப்படுத்தற்கும், புதிதாக துவங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் சிறப்பான அலுவலக சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல் முக்கிய அறிவிப்பு: அரசின் தலையீடு இல்லாமலும், அரசின் கொள்கை உதவிகள் இல்லாமல் இயற்கையாக உருவான தொழிற்சாலை பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடு, இந்த பகுதியில் இருக்கும் தொழில் குழுமங்களின் செயல்பாட்டுத் திறனையும், ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த 4 ஏரியாவுக்கு ஜாக்பாட்.. டெக் ஊழியர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு கொண்ட்டாடம்!

தமிழ்நாட்டில் எல்லாம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் நீண்ட காலமாக பல தொழிற்சாலைகள் ஒன்றிணைந்து இயங்கி வரும், இது அரசின் உதவியாலோ அல்லது கொள்கை வாயிலாகவோ உருவாக்கப்பட்டு இருக்காது. அப்பகுதியில் உருவாக்கிய வாய்ப்புகள், வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் இந்த தொழிற்சாலை கிளஸ்டர் உருவாகியிருக்கும். இத்தகைய பகுதிகளை கண்டறிந்து உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2வது முக்கிய அறிவிப்பு: கிண்டி, அம்பத்தூர், மதுரை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய முக்கிய தொழில் மையங்களில் co-working spaces-ஐ நிறுவ சுமார் ரூ. 23.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டு பணி இடங்கள், ஸ்டார்ட்அப் தொழில் முனைவோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 25 முதல் 225 பேர் வரையில் ஒன்றாக இணைந்து பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த CO-Working Space வெறும் அலுவலக மட்டும் வழங்குவதில்லை, அத்தியாவசிய தொழில்நுட்ப வசதிகள், உணவக சேவைகள் மற்றும் சிறப்பான கான்பரென்ஸ் ஹால் போன்ற பிற முக்கியமான சேவைகளையும் தமிழ்நாடு அரசு வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஏற்கனே நியோ டைடல் பார்க் திட்டத்தில் மிகப்பெரிய சாதனையை மற்றும் வளர்ச்சியை கண்டு வரும் வேளையில், தற்போது கோ வொர்கிங் ஸ்பேஸ் பிரிவிலும் மாஸ் காட்ட போகிறது. தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தொழிற்துறை வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு மாறி வருகிறது, இதன் ஒரு பகுதியாகவே கோ வொர்கிங் ஸ்பேஸ்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+