தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது..! வணிகர்களின் திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என வணிகர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிக்கன் பிரியர்கள் அதிகம், குறிப்பாக உணவகங்களில் தினமும் சிக்கன் பிரியாணி, கிரில்ல்டு சிக்கன், சிக்கன் லாலிபாப், சில்லி சிக்கன் பல வகைகளில் கோழி இறைச்சி உணவு பரிமாறப்படுகிறது.

பெரும்பாலான வீடுகளில் வாரத்தில் ஒரு முறையாவது சிக்கன் சமைத்து விடுவார்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கட்டாயம் வீட்டின் அசைவ சாப்பாடு தான். இந்த சூழலில் வரும் 31ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என வணிகர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 60,000 கடைகளில் பிராய்லர் கோழி விற்கப்படாது என கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது..! வணிகர்களின் திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

தஞ்சாவூரில் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கோழி வணிகர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, பிராய்லர் கோழிகளுக்கான தீவன கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Also Read

மேலும், விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படி தீவனங்களை வழங்கினால், கோழியின் இறைப்பையில் 100 கிராம் முதல் 200 கிராம் வரை தீவனமும் தண்ணீரும் தங்கிவிடும். கோழி வாங்கும் போது, சுமார் 150 கிராம் வரை அதன் எடை அதிகமாக இருக்கும். இதனால் ஒரு கோழிக்கு கூடுதல் 5 முதல் 10 ரூபாய் வரை கொடுக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளருக்கு பண நஷ்டம் ஏற்படும் என்பது வணிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதேபோல் கோழியை வெட்டி சுத்தம் செய்யும் போது, இறைப்பையில் உள்ள செரிக்காத தீவனமும் அதோடு சேர்ந்த கழிவுகளும் கறியில் சிந்தி இறைச்சியை பாழாக்கிவிடுவதாக வணிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். எனவே சுத்தமான இறைச்சியை வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

Recommended For You

எனவே விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு தீவனம் வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனை கோரிக்கையாக முன் வைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படுவதாக விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அன்றைய தினம் முதல் கோழி வணிகர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் உணவகங்களை நடத்துபவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான கோழி இறைச்சியை வாங்கி வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பிராய்லர் கோழி கிடைக்காது என்பதால் நாட்டுக்கோழி உள்ளிட்டவற்றை வாங்க நேரிடலாம். ஆனால் பிராய்லர் கோழி தான் விலை குறைவு என்பதால் லட்சக்கணக்கான மக்களின் அசைவ உணவு தேவையை அது தான் பூர்த்தி செய்து வந்தது. அதுவே விற்கப்படாது என்றால் சாதாரண மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+